கூட்டமைப்பின் காலைவாரிய வடக்கு முதல்வர்

(25.07.2015) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வேட்டைக்கு உதவவேண்டும் என நீண்ட அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டபோதும் வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் இன்று நடைபெற்ற விஞ்ஞாபன வெளியீடு மற்றும் முதலாவது தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொள்ளாது புறக்கணித்துள்ளார்.
முன்னதாக கூட்டமைப்பு சார்பு பிரச்சார மேடைகளினில் ஏற வடக்கு முதல்வர் சம்மதம் தெரிவித்துள்ளபோதிலும் எவரிற்கும் விருப்பு வாக்கிற்கு வாக்களிக்க கோரப்போவதில்லையென தெரிவித்திருந்ததாகவும் வடக்கினில் மூன்று பொதுக்கூட்டங்களிலும் அதே போன்று கிழக்கினில் மூன்று தினங்களிற்கும் பிரச்சாரம் செய்ய அவர் திட்டமிடிருந்ததாகவும் தெரியவருகின்றது.

பிரச்சாரக்கூட்டங்களினை தவிர்க்க அவர் முற்பட்ட போதும் கட்சி என்ற வகையினில் கூட்டமைப்பிற்கு பிரச்சாரம் செய்ய அவர் நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் எனினும் விருப்பு வாக்கு கோரி எவரிற்கும் ஆதரவாக தான் பிரச்சாரம் செய்யப்போவதில்லையென அவர் தீர்மானித்திருந்ததாகவும் தெரியவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com