கூச்சல் குழப்பத்தால் மாகாணசபை ஒரு மணி நேரம் ஒத்திவைப்பு

வடமாகாண முதலமைச்சருக்கு எதிரான கருத்துக்களை ஆளும் கட்சி உறுப்பினர்கள் தெரிவிக்க முற்பட்டதை அடுத்து சபையில் கடும் குழப்பம் ஏற்பட்டு சபை ஒரு மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது.

வடமாகாண சபை பட்ஜெட் விவாதம் இன்றைய தினம் (21) நடைபெற்றது. அதன் போது ஆளும் கட்சி உறுப்பினர் கே.சயந்தன் கருத்து தெரிவிக்கையில்,

முதலமைச்சர் மீது குற்றம் சாட்டும் வகையில் சில கருத்துக்களை முன்வைத்தார். அதனை அடுத்து சபையில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் கடும் கருத்து மோதல் இடம்பெற்றது.

அதன் உச்சகட்டமாக ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சபை நடுவில் சென்று குழுக்களின் தலைவர் முன்பாக நின்று அவைத்தலைவருடன் கருத்து மோதலில் ஈடுபட்டார்.

அதனையடுத்து எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா உள்ளிட்ட உறுப்பினர்கள் சிவாஜிலிங்கத்தை சமாதானப்படுத்தி அவரது இருக்கைக்கு அனுப்பி வைத்தனர்.

அதனை தொடர்ந்து சபை அமர்வை ஒரு மணி நேரத்திற்கு அவைத்தலைவர் ஒத்திவைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com