சற்று முன்
Home / செய்திகள் / குழப்பங்களைத் தோற்றுவிக்க ஐதேக சதி – இன முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் 600 கடிதங்களுடன் அமைச்சு அதிகாரிகள் மூவர் கைது

குழப்பங்களைத் தோற்றுவிக்க ஐதேக சதி – இன முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் 600 கடிதங்களுடன் அமைச்சு அதிகாரிகள் மூவர் கைது

ஜனாதிபதிக்கு அபகீர்த்தி மற்றும் இராஜ துரோக – இன முரண்பாடுகள் ஏற்படும் வகையில் தயாரிக்கப்பட்ட 600 கடிதங்களுடன் 03 பேர் கொழும்பு மத்திய அஞ்சல் நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு தபால்களைப் பொதியிட்டு அனுப்புவதற்காக கொழும்பு மத்திய அஞ்சல் நிலையத்திற்குச் சென்றபோதே சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களைக் கைது செய்த பொலிசார் அவர்களின் பொதிகளைச் சேதனையிட்டபோது மேற்குறித்த கடிதங்கள் அவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன.

இதன்போது கைது செய்யப்பட்டவர்கள் கண்டி மாவட்ட பிரபல அமைச்சர் லக்ஷமன் கிரியெல்லவின் அமைச்சின் அதிகாரிகள் என தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த கடிதங்களில் பெரும்பாலானவை ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவிற்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் உள்ளதாகவும் மற்றும் இன முரண்பாடுகளை உருவாக்கும் வகையிலான கருத்துக்களை கொண்டனவாக உள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கண்டி பிரதேசத்தில் உள்ள பல விகாரைகளுக்கு இந்த கடிதங்கள் அனுப்பி வைக்கப்படவிருந்தாகக் கூறப்படுகின்றது.

இதேவேளை கைதானவர்கள் 24, 28 மற்றும் 41 வயதுகளை உடையவர்கள் என்று தெரிவித்த பொலிசார் கைதான 03 பேரும் மேலதிக விசாரணைக்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com