குளிர் – மழை – தெருவோர வாழ்க்கை – வடக்கு கிழக்கில் பட்டதாரிகள் போராட்டம் தொடர்கிறது

வடக்கு மாகாணப் பட்டதாரிகளால் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற காலவரையறையற்ற போராட்டமும் இன்று (02) நான்காவது நாளாக இரவு பகலாக தொடர்கின்றது.

இடையிடையே மழை பெய்துவருகின்றபோதும் எமது கோரிக்கைகள் நிறைவேறும்வரை அங்கிருந்து வெளியேறப்போவதில்லை என பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.

வீதி ஓரங்களிலேயே உணவு சமைத்தும் குளிரையும் மழையையும் பொருட்டபடுத்தாது வீதி ஓரங்களிலேயே உறங்கியும் இரவு பகலாக இப் போராட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

பதாகைகளை ஏந்தியவாறு தமக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும் வரை போராட்டம் தொடருமென இவர்கள் தெரிவித்தனர்.

குழந்தைகளுடன் போராட்டத்தில் இறங்கியுள்ள வேலையற்ற பட்டதாரிகளை வடக்கு மாகாணசபை உறுப்பினர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் நேரில் சென்று பார்வையிட்டுவருகின்றனர். இவர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளை கேட்டறிந்த அவர் உரிய அதிகாரிகளுக்கு இதுபற்றி தெரிவித்து தீர்வுகாண முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.

வடக்கு பட்டதாரிகளின் போராட்டக்களத்திற்கு வலுச்சேர்ககும் முகமாக அகில இலங்கை ஒன்றினணந்த வேலையற்ற பட்டதாரி சங்கத்தின் சார்பாக வணக்கத்துக்குரிய.தெத்தே ஞானானந்ததேரர் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்துவருகின்றார்.

இதேவேளை கிழக்கு மாகாண மட்டக்களப்பு பட்டதாரிகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டம் 11 நாட்களைக் கடந்தும் அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளால் முன்னெடுக்கப்படும் காலவரையறையற்ற சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று (02) நான்காவது நாளாகவும் தொடர்கின்றது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com