குரு பெயர்ச்சி பலன்கள் 2016 – 2017 – துலாம்

707. துலாம்

நடுநிலைமை தவறாதவர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்துகொண்டு நினைத்த காரியங்களையெல்லாம் நிறைவேற்றிய துடன், பதவி, அந்தஸ்தையும் தந்த குரு பகவான் இனி 2.8.16 முதல் 1.9.17 வரை விரயஸ்தானமான 12-ம் இடத்துக்கு வருகிறார். சுபச் செலவுகள் அதிகரிக்கும். ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்ய வேண்டி இருக்கும்.

மனக் குழப்பம் அதிகரிக்கும். பழைய கடன்களை நினைத்துக் கலக்கம் உண் டாகும். வருமானத்தை உயர்த்த கூடுதலாக உழைப்பீர்கள். வீண் கவலைகள் மனதை வாட்டும். வழக்குகளில் எச்சரிக்கை தேவை.

குருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்களின் 4-ம் வீட்டைப் பார்ப்பதால், தாயாரின் உடல் நிலை சீராகும். தாய்வழி சொத்தைப் பெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள். சிலர் வேறு ஊருக்கு இடம் மாறுவீர்கள்.

குரு பகவான் ஏழாம் பார்வையால் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டைப் பார்ப்ப தால், மறைமுக எதிரிகளால் ஆதாயம் அடைவீர்கள். நீண்ட நாளாக எதிர்பார்த்து காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாகும். புது வேலை கிடைக்கும்.

குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்களின் 8-ம் வீட்டைப் பார்ப்பதால், உங்களிடம் உண்மையான அன்பும் அக்கறையும் உள்ளவர்களைப் புரிந்து கொள்வீர்கள். வேற்று மாநிலத்தைச் சேர்ந்தவர்களால் ஆதாயம் உண்டாகும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்களின் பாதகாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் 2.8.16 முதல் 19.9.16 வரை குருபகவான் பயணிப்பதால், உங்கள் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். அரசு காரியங்கள் தாமதமாகி முடியும். ஆன்மிகப் பெரியோரை சந்தித்து ஆசி பெறுவீர்கள்.

20.9.16 முதல் 24.11.16 மற்றும் 28.6.17 முதல் 14.7.17 வரை உங்களின் ஜீவனாதி பதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால், சவாலான காரியங்களைக்கூட சர்வ சாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள். அடகிலிருந்த நகை, பத்திரங்களை மீட்பீர்கள். மகளுக்கு திருமணம் முடியும்.

உங்கள் தனாதிபதியும் சப்தமாதிபதியு மான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் 25.11.16 முதல் 16.1.17 மற்றும் 15.7.17 முதல் 1.9.17 வரை குருபகவான் செல்வதால், வருமானம் உயரும். குடும்பத்தில், கணவன்-மனைவிக் குள் இருந்து வந்த மோதல்கள் விலகும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும்.

17.1.17 முதல் 21.2.17 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் உங்கள் ராசியில் குரு அமர்ந்து ஜென்ம குருவாக வருவதால், காய்ச்சல், சளித் தொந்தரவு, மஞ்சள் காமாலை போன்ற உடல் உபாதைகள் வந்து நீங்கும். குடும்பத்தில், கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்:

22.2.17 முதல் 2.5.17 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 3.5.17 முதல் 27.6.17 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்கிர கதியில் செல்வதால், நினைப்பது ஒன்றும் நடப்பது ஒன்றுமாக இருக்கும். வேலைச் சுமையால் அசதி உண்டாகும்.

வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் ஈட்டுவீர்கள். பழைய சரக்குகளைத் தள்ளுபடி விலைக்கு விற்பீர்கள். வங்கிக் கடன் பெற்று சிலர் புது முதலீடு செய்வீர்கள். கமிஷன், ஏஜென்சி, மருந்து, உர வகைகளால் லாபமடைவீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக் கும். எனினும், எவ்வளவு உழைத்தாலும் நல்ல பெயர் எடுக்க அரும்பாடு படவேண்டும். சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.

மாணவ-மாணவிகளே! படிப்பில் அக்கறை காட்டுவது நல்லது. உங்களின் திறமையை வெளிக்கொண்டுவர முயற்சி செய்யுங்கள். சிலருக்கு பள்ளி மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும்.

கலைத்துறையினரே! கிடைக்கின்ற வாய்ப்புகளைச் சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். வீண் வதந்திகளும், கிசுகிசுக்களும் இருக்கத்தான் செய்யும். மனம் தளராமல் செயல்படுங்கள்; சாதிக்கலாம்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, உங் களுக்கு புதிய படிப்பினைகளைத் தருவதுடன், வாழ்க்கையை எப்படி எதிர்க்கொள்வது என்று கற்றுத் தருவதாகவும் அமையும்.

பரிகாரம்: தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஆதிநாத நாயகி உடனுறை ஆதிநாதப் பெருமாளை ஏதேனும் ஒரு சனிக்கிழமையில் துளசி மாலை அணிவித்து வணங்குங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com