குரு பெயர்ச்சி பலன்கள் 2016 – 2017 – மேஷம்

 

 

1

01. மேஷம்

எதையும் உடனே கிரகித்துக்கொள்ளும் ஆற்றல் மிக்கவர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்ந்து சுப பலன்களைத் தந்த குருபகவான், 2.8.16 முதல் 1.9.17 வரை 6-வது வீட்டுக்குள் பிரவேசிக்கிறார். சின்னச் சின்ன இழப்புகளும், ஏமாற்றங்களும் இருக்கும் என்றாலும் அதற்காக அஞ்ச வேண்டாம்.

எந்த ஒரு காரியத்தையும் நன்கு யோசித்துச் செய்தால் ஏமாற்றங்களைத் தவிர்க்கலாம். கணவன் – மனைவிக்குள் சிலர் வீண் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பார்கள். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வழக்குகள் விஷயத்தில் எச்சரிக்கை தேவை. அவ்வப் போது கடன்சுமை கலக்கம் தரலாம்.

குரு தனது 9-ம் பார்வையால் உங்க ளின் குடும்ப ஸ்தானமான 2-ம் வீட்டைப் பார்ப்பதால், குடும்பத்தில் அமைதி உண்டாகும். தேங்கிக் கிடந்த வழக்கில் வெற்றியுண்டு. ஆரோக்கியம் சீராகும். குரு தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டைப் பார்ப்பதால், பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர் கள். வி.ஐ.பி.களின் நட்பு கிடைக்கும். வேலை கிடைக்கும். வேற்று மாநிலத் தவர்களால் அனுகூலம் உண்டாகும்.

குருபகவான் தனது 7-ம் பார்வையால் உங்களின் 12-ம் வீட்டைப் பார்ப்பதால் திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுபச் செலவுகள் அதிகமாகும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

2.8.16 முதல் 19.9.16 வரை உங்கள் பூர்வ புண்ணியாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் குரு பயணிப்பதால், குழந்தை பாக்கியம் கிட்டும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். பூர்வீகச் சொத்தில் உங்களுக்கு சேர வேண்டிய பங்கு வந்து சேரும்.

20.9.16 முதல் 24.11.16 மற்றும் 28.6.17 முதல் 14.7.17 வரை உங்கள் சுகாதிபதியான சந்திரனின் அஸ்த நட்சத்திரத்தில் குரு செல்வதால், வசதியுள்ள வீட்டுக்கு குடி புகுவீர்கள். தாயாருக்கு இருந்த நோய் குணமாகும்.

25.11.16 முதல் 16.1.17 மற்றும் 15.7.17 முதல் 1.9.17 வரை உங்கள் ராசிநாதனும், அஷ்டமாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் குரு செல்வதால், உடன்பிறந்தவர்கள் உங்க ளைப் புரிந்துகொள்வர். வீடு, மனை வாங்கு வது, விற்பது லாபகரமாக முடியும். ஆனால், அலைச்சலும் செலவினங்களும் தொடரும்.

17.1.17 முதல் 21.2.17 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசியில் சென்று உங்கள் ராசியைப் பார்ப்பதால், திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கள் வரும். திருமணம் கூடி வரும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.

குரு பகவானின் வக்ர சஞ்சாரம்:

22.2.17 முதல் 2.5.17 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 3.5.17 முதல் 27.6.17 வரை அஸ்த நட்சத்திரத்திலும் வக்கிர கதியில் செல்வதால், சகோதர வகையில் மனவருத்தம், சொத்து வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் வந்து செல்லும். தன்னம் பிக்கை குறையும். எனினும், முன்னேற்றம் தடைப்படாது.

வியாபாரத்தில், ஏற்ற-இறக்கங்கள் இருக்கவே செய்யும். ஆகவே, சந்தை நிலவரத்தை அறிந்து அதற்கேற்ப முதலீடு செய்யுங்கள். பழைய வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ளுங்கள். கமிஷன், உணவு, மருந்து, கன்சல்டன்சி ஆகிய வகைகளால் ஆதாயம் அடைவீர்கள்.

உத்தியோகத்தில் உங்களின் நிலையை தக்கவைத்துக் கொள்ள போராட வேண்டியது இருக்கும். உங்கள் உழைப்பைப் பயன்படுத்தி வேறு சிலர் முன்னேறுவார்கள். விரும்பத்தகாத இடமாற்றங்கள் உண்டாகும். நியாயமாக கிடைக்க வேண்டிய பதவி உயர்வு, சம்பள உயர்வுகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும்.

மாணவ-மாணவிகளே! தொடக்கத்தில் இருந்தே படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். கட்டுரை, பேச்சு, இலக்கியப் போட்டிகளில் பரிசு பெற வாய்ப்பு உண்டு. நீங்கள் விரும்பிய கல்வி நிறுவனத்தில் போராடி இடம்பிடிப்பீர்கள்.

கலைத் துறையினருக்கு, மூத்த கலைஞர் களின் ஆதரவு கிடைக்கும். விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். உங்கள் உழைப்புக்கு சிலர் உரிமை கொண்டாட வாய்ப்பு உண்டு. எனவே கவனம் தேவை.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, உங்களது எதிர்பார்ப்புகளை அதிகமாக்கி, அவ்வப்போது உங்களை ஏமாற்றும். எனினும், உங்களின் சகிப்புத் தன்மையாலும் விட்டுக் கொடுத்துப் போகும் குணத்தாலும் ஓரளவு மகிழ்ச்சியை தருவதாக அமையும்.

பரிகாரம்: வேலூர் மாவட்டம் சோளிங்கர் எனும் ஊரில் அருள் பாலிக்கும் யோக நரசிம்மரை ஏகாதசி திதி நடைபெறும் நாளில் நெய் தீபமேற்றி வணங்கி வாருங்கள். நல்லது நடக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com