குரு பெயர்ச்சி பலன்கள் 2016 – 2017 – விருச்சிகம்

808. விருச்சிகம் 

கேள்விக் கணைகள் தொடுப்பதில் வல்லவர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்ந்துகொண்டு, உங்களைப் பலவகைகளிலும் அலைக்கழித்த குருபகவான், 2.8.16 முதல் 1.9.17 வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்வதால், இனி முன்னேற்றம் உண்டாகும். எதிலும் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மரியாதை கிடைக்கும். கொடுத்த கடன் திரும்பும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன் – மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். சகோதர வகையில் இருந்து வந்த பிணக்குகள் நீங்கும். புகழும் செல்வாக்கும் கூடும். சிலருக்கு வீடு வாங்கும் யோகம் உண்டு. சிலருக்கு மழலை பாக்கியம் கிடைக்கும். பிள்ளை களின் வருங்காலத்துக்காகச் சேமிக்கத் தொடங்குவீர்கள்.

குருபகவான் தனது 5-ம் பார்வையால், உங்களின் 3-ம் வீட்டைப் பார்ப்பதால், சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். வீடு, மனை வாங்குவது லாபகரமாக முடியும். இளைய சகோதர வகையில் உதவிகள் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.

குரு பகவான் 7-ம் பார்வையால் ராசிக்கு 5-ம் வீட்டைப் பார்ப்பதால், புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். மகளுக்கு வேலை கிடைக்கும். மகனுக்கு நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல குடும்பத்தி லிருந்து வாழ்க்கைத் துணை அமைவார். வழக்கில் வெற்றி கிடைக்கும். குலதெய்வக் கோயிலுக்குக் குடும்பத்தினருடன் சென்று நேர்த்திக் கடன் செலுத்துவீர்கள்.

குருபகவான் தனது 9-ம் பார்வையால் 7-ம் வீட்டைப் பார்ப்பதால், மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். டி.வி., ஃப்ரிட்ஜ் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். வீட்டை அழகுபடுத்துவீர்கள்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் ஜீவனாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் 2.8.16 முதல் 19.9.16 வரை குருபகவான் பயணிப்பதால், சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். அரசாங்க விஷயங்கள் சுலபமாக முடியும். சிலர் சொந்தமாகத் தொழில் தொடங்குவீர்கள்.

20.9.16 முதல் 24.11.16 மற்றும் 28.6.17 முதல் 14.7.17 வரை உங்கள் பாக்கியாதி பதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் குரு செல்வதால், உங்களின் புகழ், கௌரவம் உயரும். பணவரவு அதிகரிக்கும். தந்தையாரின் ஆரோக்கியம் சீராகும். நிரந்தர வருமானத்திற்கு வழி தேடுவீர்கள்.

உங்கள் ராசியாதிபதியும்-சஷ்டமாதி பதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் 25.11.16 முதல் 16.1.17 மற்றும் 15.7.17 முதல் 1.9.17 வரை குருபகவான் செல்வதால், எதிர்ப்புகள் குறையும்.புதிதாக சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். கடனில் ஒரு பகுதி தீரும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அக்கறை செலுத்துவார்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள்.

17.1.17 முதல் 21.2.17 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 12-ம் வீட்டில் குரு மறைவதால், எதிர்பாராத பயணங்கள் உண்டு. வீடு கட்டும் முயற்சியில் இறங்குவீர்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

குருபகவானின் வக்கிர சஞ்சாரம்:
22.2.17 முதல் 2.5.17 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 3.5.17 முதல் 27.6.17 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்கிர கதியில் செல்வதால், மனக்குழப்பங் களும், தடுமாற்றங்களும் இருந்து கொண்டே யிருக்கும். ஆனால், பண வரவு குறையாது.
வியாபாரத்தில் சந்தை நுணுக்கங்களைத் தெரிந்துகொண்டு பெரிய முதலீடுகள் செய்வீர்கள். வெளிநாட்டு நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். துரித உணவகம், இரும்பு, ரியல் எஸ்டேட், கடல் வாழ் உயிரினங்களால் லாபம் பெருகும். கடையை பிரபலமான இடத்துக்கு மாற்றுவீர்கள்.
உத்தியோகத்தில் அதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். சம்பள உயர்வு, பதவி உயர்வு உண்டு. தலைமைப் பொறுப்பு தேடி வரும்.
மாணவ-மாணவிகளே! உங்களுடைய தனித் திறமைகளை அதிகரித்துக் கொள்வீர் கள். விரும்பிய கோர்ஸில் சேருவீர்கள்.
கலைத்துறையினரே! விருதுகள் கிடைக்கும். உங்களின் கற்பனைத் திறன் பெருகும். சக கலைஞர்களை மதிப்பீர்கள்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, உங்களை தலை நிமிரச் செய்வதுடன், வசதி, வாய்ப்புகளைத் தருவதாகவும் அமையும்.
பரிகாரம்: மகாபலிபுரத்துக்கு அருகிலுள்ள திருப்போரூரில் வீற்றிருக்கும் முருகப்பெருமானையும் சிதம்பர சக்கரத்தையும் ஏதேனும் ஒரு செவ்வாய் கிழமை அல்லது சஷ்டி திதி நாளில் சென்று தரிசியுங்கள். செல்வம் பெருகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com