குரு பெயர்ச்சி பலன்கள் 2016 – 2017 – கடகம்

4கடகம்

உலக நடப்புகளை உன்னிப்பாக கவனிப்பவர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் அமர்ந்து பலன்களை அருளிய குருபகவான், இப்போது 3-ம் வீட்டில் அடியெடுத்து வைக்கிறார். 2.8.16 முதல் 1.9.17 வரை உங்களின் சஷ்டம-பாக்கிய ஸ்தானாதிபதியான குருபகவான் மூன்றாம் வீட்டில் மறைவதால், உங்களின் அணுகு முறையை மாற்றிக்கொள்வது நல்லது.

வேலைகளை முடிப்பதில் இழுபறி நீடிக்கும். தன்னம்பிக்கை குறையும்.கணவன்-மனைவிக்குள் சச்சரவுகள் வந்தாலும், அன்பும், அந்நியோன்யமும் குறையாது. இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வரும்.

குருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டைப் பார்ப்ப தால், உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த மோதல்கள் விலகும். புது வேலை அமையும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள்.

குருபகவான் தனது 7-ம் பார்வையால் உங்களின் 9-ம் வீட்டைப் பார்ப்பதால், பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். தந்தையாரின் ஆரோக்கியம் சீராகும். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும்.

குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்களின் லாப வீட்டை பார்ப்பதால், உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறை வேறும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் தனாதிபதியான சூரியனின் உத்திர நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில், 2.8.16 முதல் 19.9.16 வரை குரு பயணிப்பதால், உங்களின் மதிப்பு கூடும். திடீர் பணவரவு உண்டு. அரசு காரியங்கள் உடனே முடியும். அதிகாரப் பதவியில் இருப் பவர்களின் அறிமுகம் கிடைக்கும்.

20.9.16 முதல் 24.11.16 வரை மற்றும் 28.6.17 முதல் 14.7.17 வரையிலும், உங்கள் ராசிநாதனான சந்திரனின் அஸ்த நட்சத் திரத்தில் குருபகவான் செல்வதால், வருமானம் உயரும். ஆரோக்கியம் கூடும். உறவினர்களின் வருகையால் வீடு களை கட்டும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

உங்களின் பிரபல யோகாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் 25.11.16 முதல் 16.1.17 வரை மற்றும் 15.7.17 முதல் 1.09.17 வரை குருபகவான் செல்வதால், நினைத்த காரியங்களை முடிப்பீர்கள். உங்களின் புகழ் உயரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். வீட்டு மனை வாங்க முயற்சி செய்வீர்கள்.

17.1.17 முதல் 21.2.17 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 4-ம் வீட்டில் குரு நுழைவதால், சின்னச் சின்ன கவலைகள் வந்து போகும். தாயாரின் உடல் நலம் பாதிக்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும்.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்:

22.2.17 முதல் 2.5.17 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும், 3.5.17 முதல் 27.6.17 வரை அஸ்த நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால், வேலைச்சுமையும், அலைச்சலும் இருக்கும். பணப் பற்றாக் குறையை சமாளிப்பீர்கள்.

வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் உண்டு.சிலர், கடன் வாங்கி கடையை விரிவுபடுத்து வீர்கள். சிலர், கூட்டுத் தொழிலில் நம்பிக்கை யான பங்குதாரரை விட்டுப் பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். ஸ்டேஷனரி, போர்டிங் லாட்ஜிங், பெட்ரோ கெமிக்கல், டிராவல்ஸ் வகைகளால் ஆதாயம் அடைவீர்கள்.

உத்தியோகத்தில் பணிகளைக் கொஞ்சம் போராடி முடிக்க வேண்டி வரும். கடினமாக உழைத்தும் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். அதிகாரிகளின் ஆதரவு கூடும். சில நேரங்களில் அதிகாரிகள் கூடுதலாகத் தரும் வேலைகளை சலித்துக்கொள்ளாமல் செய்வது நல்லது. அடிக்கடி இடமாற்றம் வரும்.

மாணவ-மாணவிகளே! சின்னச் சின்ன தவறுகளையும் திருத்திக் கொள்ளுங்கள். வகுப்பறையில் ஆசிரியரிடம் தயங்காமல் சந்தேகங்களைக் கேளுங்கள். கணக்கு, வேதியியல் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

கலைத் துறையினருக்கு மறைமுகப் போட்டிகள் அதிகரிக்கும். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். யதார்த்தமான படைப்பு களைத் தருவதற்கு முயற்சியுங்கள்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, அவ்வப்போது உங்களை பலவீனமாக உணர வைக்கும். எனினும், முன்னெச்சரிக்கை உணர்வாலும், யதார்த்தமான பேச்சாலும் ஒரளவு முன்னேற்றத்தைப் பெற்றுத் தருவதாக அமையும்.

பரிகாரம்: கோயம்புத்தூர் மாவட்டம் ஆவாரம்பாளையம் எனும் ஊரில் வீற்றிருக்கும் பண்ணாரி அம்மனை ஏதேனும் ஒரு திங்கள் கிழமையில் எலுமிச்சம் பழம் மாலை அணிவித்து வணங்குங்கள். முயற்சி திருவினையாக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com