குரு பெயர்ச்சி பலன்கள் 2016 – 2017 – மிதுனம்

303.மிதுனம்

யதார்த்த நிலையை உணர்ந்து செயல்படும் அன்பர்களே!

இதுவரை உங்களின் ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்ந்து உங்களை முடக்கி வைத்திருந்த குருபகவான், 2.8.16 முதல் 1.9.17 வரை 4-ம் வீட்டில் அமர்வதால், எதிலும் உணர்ச்சிவசப்படாமல் பிரச்னை களை அறிவுபூர்வமாகவும், அனுபவ பூர்வமாகவும் அணுகுங்கள்.

சுற்றியிருப்பவர்களில் நல்லவர் யார் கெட்டவர் யார் என்பதை அறிவதில் குழப்பம் ஏற்படும். எவ்வளவு பணம் வந்தாலும் செலவுகள் துரத்தும். வேலைச் சுமையால் டென்ஷன் அதிகரிக்கும். உத்தியோகத்தின் பொருட்டோ, வீண் சந்தேகத்தாலோ தம்பதிக்கு இடையே பிரிவுகள் ஏற்படலாம். சோர்வு, கை- கால் வலி வந்து விலகும். தாய்வழி உறவினர் களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.

குருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டை பார்ப்பதால், அலைச்சலுடன் ஆதாயம் உண்டாகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும்.

உங்களின் உத்தியோக ஸ்தானமான 10-ம் வீட்டை குரு தனது 7-ம் பார்வையால் பார்ப்பதால், புது வேலைக்கு முயற்சித்தவர் களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் அமைதி உண்டாகும். புது பதவி, பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக் கப்படுவீர்கள்.

குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டைப் பார்ப்ப தால் சுபச் செலவுகள் அதிகமாகும். வெளித் தொடர்புகள் விரிவடையும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் தைரிய ஸ்தானாதிபதியான சூரியனின் உத்திர நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் – கன்னி ராசியில் 2.8.16 முதல் 19.9.16 வரை குருபகவான் பயணிப்பதால் தைரியம் பிறக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு சாதகமாகும்.

20.9.16 முதல் 24.11.16 வரை மற்றும் 28.6.17 முதல் 14.7.17 வரை உங்கள் தனாதிபதியான சந்திரனின் அஸ்த நட்சத்திரத்தில் குரு செல்வதால், சாமர்த்திய பேச்சால் சாதிப்பீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். குடும்பத்தில் அமைதி நிலவும். திருமணம் கூடி வரும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிட்டும்.

உங்கள் சஷ்டம – லாபாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் 25.11.16 முதல் 16.1.17 வரை மற்றும் 15.7.17 முதல் 1.9.17 வரை குரு செல்வதால், உடன்பிறந்தவர்கள் உங்களைத் தவறாகப் புரிந்துகொள்வார்கள். தோல்வி மனப்பான்மையால் மனஇறுக்கம் உண்டாகும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.

17.1.17 முதல் 21.2.17 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 5-ம் வீட்டில் குரு அமர்வதால், புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் அலட்சியப் போக்கு மாறும். உறவினர்கள் மதிப்பார்கள்.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்:

22.2.17 முதல் 2.5.17 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும், 3.5.17 முதல் 27.6.17 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்கிர கதியில் செல்வதால், எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடிவடையும். நெருக்கடிகளைச் சமாளிக்கும் ஆற்றலும் உங்களுக்குக் கிடைக்கும். இருமல், முதுகுத் தண்டில் வலி வந்து போகும். நல்ல வர்களுடன் நட்பை வளர்த்துக் கொள்ளுங்கள்.

வியாபாரத்தில் சிறு சிறு நஷ்டங்கள் உண்டு. தொழில் ரகசியங்கள் கசியாமல் பார்த்துக்கொள்ளுங்கள். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். கூட்டுத் தொழிலை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த ஆர்டர் தாமதமாக வரும். கட்டட உதிரி பாகங்கள், கமிஷன், காய்கறி வகை களால் லாபமடைவீர்கள்.

உத்தியோகத்தில் மேலதிகாரியைக் கணிக்க முடியாது. எனினும், கவலைகளை மறைத்துக்கொண்டு கடினமான உழைப்பைத் தொடர்வீர்கள். உங்களுக்கு நேர் மூத்த அதிகாரியை விடவும், மேல்மட்ட அதிகாரி ஆதரவாக இருப்பார். விரும்பத்தகாத இடமாற்றங்களும் வரும். அடிக்கடி விடுப்பில் செல்ல வேண்டாம்.

மாணவ-மாணவிகளே! தேர்வுகளில் போராடி வெற்றி பெறவேண்டிய நிலை என்பதால், பாடங்களை கூடுதல் கவனத்துடன் படிக்கவும். சிலருக்கு பள்ளி அல்லது கல்லூரி மாறவேண்டி இருக்கும்.

கலைத்துறையினருக்கு, வீண் வதந்தி களால் புகழ் குறையும். கிடைக்கும் வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய படைப்புகளைப் போராடி வெளியிட வேண்டி வரும்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, சிறு சிறு தடங்கல்களையும் இடமாற்றத்தையும் அவ்வப்போது தந்து உங்களை அலைக்கழித் தாலும், தொடர் முயற்சியால் இலக்கை எட்டிப் பிடிக்க வைப்பதாக அமையும்.

பரிகாரம்: நாச்சியார்கோவிலில் வீற்றிருக்கும் வஞ்சுளவல்லி உடனுறை திருநறையூர் நம்பி மற்றும் கருடாழ்வாரை ஏதேனும் ஒரு வியாழக்கிழமையில் துளசி மாலை அணிவித்து வணங்கி வாருங்கள். மனஅமைதி கிட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com