குரு பெயர்ச்சி பலன்கள் 2016 – 2017 – மீனம்

1212. மீனம்

இயற்கையை உணரும் சக்தி கொண்டவர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 6-ல் அமர்ந்துகொண்டு, பலவகைகளிலும் உங்களை சிரமப்படுத்திய குருபகவான் இனி 2.8.16 முதல் 1.9.17 வரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து உங்களுடைய ராசியைப் பார்க்க இருப் பதால், தன்னம்பிக்கை கூடும்.

தடைப்பட்ட திருமணம் கூடிவரும். கடனாகக் கொடுத்த பணம் திரும்ப வரும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். பிரிந்திருந்த தம்பதியர் ஒன்று சேருவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். புது வேலை கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி கிடைக்கும். வெளிவட்டாரத்தில் உங்கள் புகழ் கூடும்.

குருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 11-ம் வீட்டைப் பார்ப்பதால், நினைத்த காரியம் சுலபமாக முடியும். ஷேர் மூலம் பணம் வரும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும்.

குரு பகவான் 7-ம் பார்வையால் உங்கள் ராசியைப் பார்ப்பதால், துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகள் வீட்டில் ஏற்பாடாகும். வாழ்க்கைத் துணை உங்கள் முயற்சியை ஆதரிப்பார். அவரின் ஆரோக்கியம் சீராகும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும்.

குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்களின் 3-ம் வீட்டைப் பார்ப்பதால், தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். இளைய சகோதர வகையில் நன்மை உண்டாகும். வீடு, மனை வாங்கு வது, விற்பது லாபகரமாக முடியும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் சஷ்டமாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் 2.8.16 முதல் 19.9.16 வரை குருபகவான் பயணிப்பதால், திட்டமிடாத செலவுகள் இருக்கும். மறைமுக எதிர்ப்புகள் அதிகமாகும். இனம் தெரியாத கவலைகள் வந்து போகும்.

20.9.16 முதல் 24.11.16 மற்றும் 28.6.17 முதல் 14.7.17 வரை உங்கள் பூர்வ புண்ணியாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால், புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். மகனுக்கு நல்ல குடும்பத்திலிருந்து பெண் அமையும். பூர்வீகச் சொத்தில் மாற்றம் செய்வீர்கள். சிலர் வீடு மாறுவீர்கள்.

உங்கள் தனாதிபதியும் பாக்கியாதிபதியு மான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் 25.11.16 முதல் 16.1.17 மற்றும் 15.7.17 முதல் 1.9.17 வரை குரு செல்வதால், எதையும் சாதிக்கும் துணிவு வரும். தந்தை மற்றும் தந்தைவழி உறவினர்களின் ஆதரவு பெருகும். பாகப் பிரிவினை சுமுகமாக முடியும்.

17.1.17 முதல் 21.2.17 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 8-ம் வீட்டில் குரு மறைவதால், எதிலும் ஆர்வ மின்மை, காரியத் தாமதம், சிறுசிறு விபத்துகள், வேலைச்சுமை வந்து போகும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும்.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்:

22.2.17 முதல் 2.5.17 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 3.5.17 முதல் 27.6.17 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்கிர கதியில் செல்வதால், எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். சொத்துப் பிரச்னை தலை தூக்கும். வழக்கில் வழக்கறிஞரை மாற்ற வேண்டி வரும். சகோதரர்கள் அதிருப்தி அடைவார்கள்.

வியாபாரம் விறுவிறுப்படையும். தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை சரிசெய்வீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். வேலையாட்கள் மதிப்பார்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஸ்பெக்குலேஷன், இறக்குமதி, ஜுவல்லரி வகைகளால் லாபமடைவீர்கள். வியாபாரம் சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அரசாங்கத்தால் இருந்த நெருக்கடிகள் நீங்கும்.

உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். சக ஊழியர்கள் மதிக்கத் தொடங்குவார்கள். திறமைகளை வளர்த்துக் கொள்ள வாய்ப்பு கிட்டும். பதவி உயர்வு கிடைக்கும்.

மாணவ-மாணவிகளே! எண்ணங்கள் பூர்த்தியாகும். நீங்கள் விரும்பிய பாடப்பிரிவில், எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் சேருவீர்கள்.

கலைத்துறையினரே! வெளிநாட்டு நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். மக்கள் மத்தியில் பாராட்டப்படுவீர்கள்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, கஷ்டங்களில் மூழ்கிக் கிடந்த உங்களை கலகலப்பாக்குவதுடன், வெற்றியையும், அதிரடி வளர்ச்சியை தருவதாகவும் அமையும்.

பரிகாரம்: கும்பகோணத்தில் அருள்பாலிக்கும் கரும்பாயிரம் பிள்ளையாரை ஏதேனும் ஒரு சதுர்த்தி திதி நாளில் அருகம்புல் மாலை அணிவித்து வணங்குங் கள். சாதனை படைப்பீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com