சற்று முன்
Home / செய்திகள் / குருநாகலில் சஜித் நம்பிக்கை!

குருநாகலில் சஜித் நம்பிக்கை!

எனக்கு ஆதரவாக நடத்தப்படும் பேரணிகள் கட்சியை பிளவுபடுத்தவதற்காக நடத்தப்படுவதல்ல. மாறாக, கட்சியை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கான பேரணிகள். நான் ஆட்சிக்கு வந்தால், குடும்ப அதிகாரத்தை நிறுவப் போவதில்லை. நாடு மக்களுக்கு சொந்தமானது. சில நபர்கள் தனிப்பட்ட நோக்கங்களுடன் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுகின்றனர்“

இவ்வாறு தெரிவித்தார் அமைச்சர் சஜித் பிரேமதாச.

குருநாகலில் இன்று பிற்பகல் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

அதிகாரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் குடும்ப அரசியல் மற்றும் குடும்பத்தினருக்கு பதவிகளை கொடுக்கும் வேலைகளில் ஈடுபட மாட்டேன். எனது குடும்ப சக்தி மக்களின் சக்தி என்று கூறினார்.

அவருக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்படும் பேரணி யாரையும் எதிர்க்கும் நோக்கத்துடன் நடத்தப்படவில்லை என்றும், ஐ.தே.க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவருவதற்கான முயற்சியாகும் என்றும் சஜித் குறிப்பிட்டார்.

“ஐக்கிய தேசியக்கட்சி, அதன் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் கரு ஜெயசூரியா ஆகியோரின் ஆசீர்வாதங்களுடன் நாட்டை கட்டியெழுப்ப எனக்கு ஒரு வாய்ப்பை வழங்கும் என்று நான் நம்புகிறேன்” என்று அவர் கூறினார்.

நாட்டில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அபிவிருத்தி செய்வதன் மூலமும் சுயதொழில் மூலமும் பெண்கள் அதிகாரம் பெறுவதற்கும் இளைஞர்களின் முன்னேற்றத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றார்.

“உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவை சமாளிப்பதற்கான ஒரே தீர்வு ஒரு குடும்பத்திற்கு வருவாய் ஈட்டும் முறைகளை அதிகரிப்பதாகும்” என்றார்.

தனது அரசாங்கம் பெண் சுய வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும், அதே நேரத்தில் அவர்களுக்கு பாதுகாப்பையும் வழங்கும் என்றார்.

நிலையான அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு மிகுந்த முன்னுரிமை அளிப்பதாகவும், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதாகவும் கூறினார். மேலும், எந்த மதத்தையும் பொருட்படுத்தாமல் மத வழிபாட்டுத் தலங்கள் அபிவிருத்தி செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

“நான் மாளிகைகளில் நேரத்தை செலவிட மாட்டேன், என் தொடக்கங்களை மறக்க மாட்டேன். அதிகாரத்திற்கு என்னை வரவழைத்தால், நான் மக்களுடன் இணைந்து செயல்படுவேன்” என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com