குப்பைக்குள் தூக்கி எறிவேன்- ரணில் ஆவேசம்


குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இன மற்றும் அடிப்படைவாதங்களை தூண்டிவிடும் செயற்பாடுகளுக்காக ஆதரவளிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என்று தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, “இவ்வாறான செயற்பாடுகளை தூண்டிவிட்டு செயற்படுபவர்கள் இறுதியில் குப்பைக் கூடைக்குள் தூக்கியெறியப்படுவார்கள் என்பதே வரலாற்றுச் சான்றாகும்” என்றும் சுட்டிக்காட்டினார். கடந்த ஆட்சியின் போது இன மற்றும் அடிப்படைவாத செயற்பாடுகள், அனுசரணையுடன் இடம்பெற்றிருந்தன. எனினும், தற்போது அவ்வாறான அனுசரணை எதுவும் வழங்கப்படுவதில்லை. இதுவே, இங்குள்ள வித்தியாசமாகும் என்றும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார். நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற, பிரதமரிடம் கேளுங்கள் நேரத்தின் போது, ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட எம்.பியான எஸ்.எம்.மரிக்கார் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதேவேளை “அதிகாரத்துக்கு வர முயல்வோரே இனவாதத்துக்கு அர்த்தம் கற்பிக்கப்பார்ப்பதாகக் குறிப்பிட்ட அவர் இனவாதத்தையும் அடிப்படைவாதத்தையும் தூண்டிவிட்டு குறுகிய அரசியல் இலாபத்தைப் பெற்றுக்கொள்வதே இவர்களது நோக்கமாகும் என்றும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com