குத்துச்சண்டை வீரர் மொஹம்மட் அலி தனது 74ஆவது வயதில் காலமானார்!

e10fed1cb90c8ab86055ccc776c6e442_Lமுன்னாள் உலக அதிபார குத்துச்சண்டை சாம்பியனும் உலக பிரபல்யம் பெற்ற விளையாட்டு வீரர்களில் ஒருவருமான மொஹம்மட் அலி தனது 74 ஆவது வயதில் இன்று காலமானார்.
அவர் நரம்புத்தளர்ச்சி மற்றும் சுவாச நோய்களால், அவதியுற்று வந்த அவர், அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் பீனிக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். அவரது இறுதிக் கடமைகள், அவரது சொந்த ஊரான லூயிவில்லேவில் இடம்பெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மொஹம்மட் அலி

பிறப்பு: ஜனவரி 17, 1942 (வயது 74), லூயிவில்லே, கென்டக்கி, அமெரிக்கா
குழந்தைகள்: லைலா அலி, ரசீதா அலி, ஹனா அலி, அசாத் அமின், மரியம் அலி, ஜமீலா அலி, காலியா அலி, முகமது அலி ஜூனியர், மியா அலி
மனைவி: யொலாண்டா வில்லியம்ஸ்
சகோதரர்: ஏ. ஆர். ரகுமான் அலி

சாதனைகள்
1960 ல் ஒலிம்பிக் லைட்-ஹெவிவெயிட் தங்கம்
தொடர்ச்சியாக உலக அதிபார குத்துச்சண்டை சாம்பியன்: 1964 முதல் 1967 முதல் 1978 வரை, 1978 -1979.
61 தொழில்முறை போட்டிகளில், 56 இல் (37 நொக்அவுட், 19 தீர்ப்பு) வென்றார், 5 இல் (4 தீர்ப்பு, 1 ஓய்வு) தோல்வி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com