குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டாதீர்கள் – சிறிதரன் எம்.பி காட்டம்

யாழ் மாவட்டச் செயலகத்தில் 28.02.2016 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தொழிற்பயிற்சி அதிகார சபைக்கான அலுவலகக் கட்டடம் அமைப்பதற்கான காணி கொள்வனது தொடர்பில் யாழ் நகரப்பகுதிக்குள் காணி ஒன்றினைப் பெற்றுத்தருமாறு தொழிற்பயிற்சி அதிகாரசபையினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

அதன்போது குறுக்கிட்டுப் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் எல்லோரும் யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் என்று குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டாதீர்கள். யாழ் நகரப்பகுதிக்குள் இட நெருக்கடி நிலவுகின்றது. சுத்தமான நீர் என்பன பெறுவது சிரமமாக உள்ளது. இந்த நெருக்கடிகளை எவ்வாறு குறைப்பது என்பது பற்றி நாம் ஆலோசித்துவருக்கின்றோம்.
எல்லோரும் யாழ்ப்பாண நகரம்தான் வேண்டும் என்கிறார்கள். யாழ்ப்பாணத்திலிருந்து மூன்று நான்கு கிலோமீற்றர் தூரத்திற்குள் மண்டைதீவு, அல்லைப்பிட்டி இருக்கின்றன. அங்கு நிறையக் காணிகள் இருக்கின்றன. சுத்தமான குடிநீர் இருக்கிறது. அப்பகுதிகளை நோக்கி அலுவலக கட்டடங்களை அமைக்கும் வேலைகளை நகர்த்திக்கொள்ளுங்கள் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com