கீரிமலையிலும் “அம்மாச்சி“ உணவகம்

கீரிமலையில் அமைக்கப்பட்ட #அம்மாச்சி பாரம்பரிய உணவகம் நேற்றைய தினம் (01) மாலை 5மணியளவில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்காவினால் திறந்துவைக்கப்பட்டது.

நினைவுக்கல்லின் திரைச்சீலையினை முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனினால் திறந்து வைக்கப்பட்டது.

நல்லிணக்க அமைச்சின் 7.2 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளது இந்நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர், க.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அரசாங்க அதிபர் மற்றும் வடமாகாண சபை அமைச்சர்கள் தெல்லிப்பழை பிரதேச செயலர், பிரதேச சபை அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.

மேற்படி உணவகத்துக்கான உபகரணங்களை வடமாகாண சபை வழங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com