சற்று முன்
Home / செய்திகள் / கிழக்கை அதிரவைத்த மக்கள் எழுச்சி – கண்ணீர் மல்க கதறிய உறவுகள்

கிழக்கை அதிரவைத்த மக்கள் எழுச்சி – கண்ணீர் மல்க கதறிய உறவுகள்

தமிழின அழிப்புக்கு சர்வதேச விசாரணையேவேண்டும், ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை அரசுக்கு மீளவும் கால அவகாசம் வழங்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இன்று (19) செவ்வாய்க்கிழமை கிழக்கில் மக்கள் எழுச்சிப் பேரணி ஒன்று இடம்பெற்றது.

இதன் போது கல்லடி பாலத்தில் இருந்து மக்கள் எழுச்சிப் பேரணி ஆரம்பமாகி பின்னர் ரயில் நிலைய வீதி ஊடாக கடந்து காந்தி பூங்கா வரை சென்றடைந்தது.

தொடர்ந்து அங்கு ஒன்று கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மக்கள் பிரதிநிதிகள் ஊடகங்களுக்கு தத்தமது கருத்துக்களை வெளிப்படுத்தினர்.

மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் அதிகளவான பொது நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள் என்பன பூட்டப்பட்டிருந்தன. எனினும் பொது போக்குவரத்து வழமை போன்று இயங்கியதை காண முடிந்தது. ஆனால் திருகோணமலை அம்பாறை மாவட்டங்கள் வழமை போன்று இயல்பு நிலையில் இயங்கியதுடன் பொது நிறுவனங்கள் வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டிருந்தன.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com