கிழக்கு மாகாண முதலமைச்சர், முப்படைகளின் முகாம்களுக்கு செல்ல தடை

unnamed-20நிகழ்வுகளின் பொருட்டோ அல்லது வேறு எந்தத் தேவையின் நிமிர்த்தமோ கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், முப்படைகளின் முகாம்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியராச்சி தெரிவித்துள்ளார்.

அதேவேளை, முப்படைகளின் அதிகாரிகளும் அவரின் நிகழ்வுகளில் பங்கேற்க மாட்டார்கள் என பாதுகாப்பு செயலர் குறிப்பிட்டார். கிழக்கு மாகாண முதலமைச்சர் கடற்படை அதிகாரி ஒருவரை தூற்றியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சம்பூர் மகாவித்தியாலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று முதலமைச்சர், கடற்படை அதிகாரி ஒருவரை குறித்த இடத்தில் இருந்து அகன்று செல்லுமாறு தூற்றிய காணொளி இணையங்களில் பரப்பப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds