கிழக்கு மாகாண சபைக்கு கால நீடிப்பு வழங்கப்படாது!- ஹிஸ்புல்லா

அதிகார துஷ்பிரயோகம் மேற்கொள்கின்ற, ஊழல் நிறைந்த கிழக்கு மாகாண சபையை அதன் கால எல்லையை நிறைவடையும் போது கலைத்து விடுவது என்றும், எந்தக் காரணம் கொண்டும் அதற்கு கால நீடிப்பு வழங்குவதில்லை என்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், கிழக்கு மாகாணசபை உள்ளிட்ட ஒன்பது மாகாணங்களினதும் கால எல்லையை நீடித்து ஒன்பது மாகாணங்களுக்கும் ஒரே நாளில் தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை பிரதமர் ரணில் வெளியிட்டிருந்தார்.

இதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியிடமிருந்து எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளதுடன், கிழக்குமாகாண சபை உள்ளிட்ட ஒன்பது மாகாணங்களுக்குமான தேர்தலை நடத்துவதற்கு அனுமதிக்கப்போவதில்லையெனவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

கிழக்கு மாகாண சபையானது உரிய நேரத்தில் கலைக்கப்படும். இது தொடர்பில் பிரதமர் முன்வைத்துள்ள சட்டமூலம் நாடாளுமன்றத்துக்கு கொண்டு வரும் போது அதனை எதிர்த்து வாக்களித்து தோற்கடிப்பதற்கான சகல நடவடிக்கையினையும் மேற்கொள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com