கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்!

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் இரவு வேளையில் வழமைக்கு மாறாக தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விடுதிப் பிரச்சினை மற்றும் மாணவர்களின் வகுப்புத் தடை நீக்குதல் தொடர்பான இரு கோரிக்கைகளைப் பிரதானமாக முன்வைத்து புதன்கிழமை இரவு தீப்பந்தம் ஏந்திய வண்ணம் பல்கலைக்கழ பிரதான நுழைவாயில் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

கடந்த செவ்வாய்கிழமை பல்கலைக்கழக நிர்வாகக் கட்டிடத் தொகுதியை (செனற்) முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் இன்று வரை அக்கட்டிடத் தொகுதியினுள்ளேயே இருந்து வருகின்றனர்.

மேற்படி ஆர்ப்பாட்டம், முற்றுகை, மற்றும் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் 19 பேருக்கு எதிராக எறாவூர் பொலிஸ் நிலையம் மூலம் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

குறிப்பிடப்பட்ட மாணவர்களை எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றில் ஆஜராகும்படி அழைப்புக் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆக்கபூர்வமற்ற சிந்தனைக்கு அப்பால் தொடர்ச்சியான வீணான ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வீண் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகின்றனர் என பல்கலைக்கழக நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.‪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com