கிழக்கில் திங்கள் மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி!

உணவு ஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் திங்களன்று மாபெரும் கவனயீர்ப்புப் பேரணியில் ஈடுபடப்போவதாக கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் அறிவித்துள்ளனர்.

கிழக்குப் பல்கலைக்கழகக் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரணிஇ பல்கலைக்கழக நுழைவாயிலில் ஆரம்பமாகி செங்கலடி பதுளை வீதி சந்தி வரை இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இப்பேரணிக்கு ஆதரவு தெரிவிக்குமாறு கிழக்கு பல்கலைக்கழகக் கலைப்பீட மாணவர் ஒன்றியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அவ்வறிக்கையில், உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடும்தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திவரும்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து எதிர்வரும் திங்கட்கிழமை கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களாகிய நாமும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com