கிழக்கிலங்கைப் பல்கலைக்கழக மாணவன் தாக்கப்பட்டபைின்னரா செயற்பாடுகள் குறித்து சிவில் சமூகம் அவசர வேண்டுகோள்

Tamil-Civil-Society-Forumகிழக்கு பல்கலைக்கழக மாணவன் தாக்கப்பட்டமை தொடர்பாகவும் அதன் பின்னரான நிகழ்வுகள் தொடர்பாகவும் தமிழ் சிவில் சமூக அமையம் அறிக்கை ஒன்றினை விடுத்துள்ளது. அறிக்கையின் முழு விபரம் வருமாறு,

 

தமிழ் சிவில் சமூக அமையம்
Tamil Civil Society Forum
மட்டக்களப்பு,
ஜுன் 2, 2016

24ஃ05ஃ2016 அன்று கிழக்கிலங்கைப் பல்கலைக்கழக மாணவன் இலட்சியமூர்த்தி சுமேஸ்காந்த்; தாக்கப்பட்டமை தொடர்பாகவும் அதன் பின்னரான நிகழ்வுகள் தொடர்பானதுமான தமிழ் சிவில் சமூக அமையத்தின் அவசர வேண்டுகோள்.
கடந்த 24.05.2016 அன்று பிற்பகல் 04.15 அளவில் சில சிங்கள மாணவர்களால் கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகத்தின் வர்த்தக மற்றும் முகாமைத்துவ பீட வருட மாணவனாகிய இலட்சிய மூர்த்தி சுமேஸ்காந்த் என்பவர் பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளேயே தாக்கப்பட்ட நிலையில் அன்றைய தினம் மாலை நேரம் செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
குறித்த சம்பவத்தை தொடர்ந்து அன்றைய தினமே பொலிஸாராலும் புலனாய்வாளர்கள் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட சிலராலும் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்;யப்பட்டதுடன் பொலிசாரல் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. மேலும் பதில் உபவேந்தராக கடமையாற்றிய கலாநிதி. கருணாகரன் அவர்களும் அன்றிரவே பாதிக்கப்பட்ட மாணவனை வைத்தியசாலையில் பார்வையிட்டுச் சென்றிருந்தார்;.
24-05-2016 ஆம் திகதி மாலையன்று இடம்பெற்ற ; குறித்த சம்பவம் தொடர்பான முறைப்பாட்டினை 25-05-2016 ஆம் திகதியன்று காலை பல்கலைக்கழக நிர்வாகத்தினரிடம் எழுத்து மூலமாக பதிவு செய்ததுடன் குற்றவாளிகளுக்கெதிராக தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும் இ.சுமேஸ்காந்த் கேட்டுக் கொண்டார். இவ் முறைப்பாட்டினை பல்கலைக்கழக ஒழுக்காற்று அதிகாரி வைத்தியசாலைக்கு சென்று அந்த மாணவனிடமே உறுதிப்படுத்திக் கொண்டார்.
ஆயினும் குறித்த முறைப்பாடு தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தினால் தாக்குதலுக்குள்ளான மாணவனுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக 26.05.2016 அன்று எமது மாணவர் ஒன்றியத்தினால் அனைத்துப் பீட தமிழ் மாணவர்களையும் ஒன்றிணைத்து கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்பட்டது.
இதையடுத்து குறித்த தாக்குதலை மேற்கொண்ட மாணவர்களுக்கு கால வரையறையின்றி வகுப்புத்தடை வழங்கப்பட்டதுடன் இது தொடர்பில் மேலதிக விசாரணையின் பின்னர் தக்க நடவடிக்கை எடுப்பதாகவும் பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் எமக்கு உறுதியளிக்கப்பட்டிருந்தது.
ஆனால் 27.05.2016 திகதி வர்த்தக முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த சிங்கள மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட வன்முறையுடன் கூடிய ஆர்ப்பட்டத்தை அடுத்து குறித்த மாணவர்களுக்கான வகுப்புத்தடை நீக்கப்பட்டதுடன் அவர்கள் பரீட்சை எழுதுவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டது.
இதன் காரணமாக இதே நாள் நண்பகல் 12.30 மணியளவில் தனது அரையாண்டு பரீட்சையை முடித்து வெறியேற காத்திருந்த போது பரீட்சை மண்டபத்திற்குள்ளே சக சிங்கள மாணவர்களால் பாதிக்கப்பட்ட சுமேஸ்காந்தினை தாக்குவதற்கான முயற்சியும் மறுபடியும் மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக பல்கலைக்கழக ஒழுக்காற்று அதிகாரிக்கு தொலைபேசி மூலம் தெரிவிக்கப்பட்டதுடன் பொறுப்பதிகாரியிடம் 30.05.2016 திகதி எழுத்து மூலமான முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.
இது இவ்வாறிருக்க 24.05.2016 சுமேஸ்காந்தினை தாக்கிய சிங்கள மாணவன் ஒருவன், தன்னை அன்றைய தினம் மாலை 04.45 மணியளவில் பல்கலைக்கழகதிற்கு முன்னால் உள்ள பேருந்து நிறுத்துமிடத்தில் வைத்து சுமேஸ்காந்த் தலைக்கவசத்தாலும் கையாலும் தாக்கியதாக கூறி 25.05.2016 இரவு 09.00 மணிக்கு பின்பு சந்திவெளி வைத்தியசாலையில் தன்னை தானே அனுமதித்துக் கொண்டு காலையில் வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளார். சம்பந்தப்பட்ட மாணவன் இச்சம்பவத்தை ஏறாவுர் பொலிஸாரிடம் முறைப்பாடும் செய்துள்ளார். அது எதிர்வரும் 01.06.2016 நீதிமன்ற வழக்காடலுக்கும் பதிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
தமிழ் மாணவர்கள் இவ்வாறாகப் பெரும்பான்மையின மாணவர்களின் வன்முறைக்கு ஆளாகியிருப்பது இச்சம்பவத்துடன் ஆறாவது தடவையாகும். பல்கலைக்கழகங்கள் பேரினவாத வன்முறை அரசியலுக்கான மாற்றப்படுவது எமக்குப் பெரும் கலக்கத்தைத் தருகின்றது. பல்கலைக்கழகங்கள் எவ்வித வன்முறைக்கும் இடம் கொடுக்காத இடமாக இருக்க வேண்டும். வன்முறையில் ஈடுபட்ட மாணவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை உடனடியாக எடுப்பதே வன்முறை அரசியலை எதிர்காலத்தில் இல்லாதொழிப்பதற்கான முதற்படி. எனவே உரிய நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட தரப்பினர் விரைந்து எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கின்றோம்.
குமாரவடிவேல் குருபரன் மற்றும் எழில் ராஜன்
இணைப் பேச்சாளர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com