சற்று முன்
Home / செய்திகள் / கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்கான விசேட குழுவொன்று அமைக்கப்படும் – பிரதமர்

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்கான விசேட குழுவொன்று அமைக்கப்படும் – பிரதமர்

கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்திக்காக விசேட குழுவொன்று அமைக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மக்களின் காணிப்பிரச்சனைகள் மாத்திரமன்றி அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பிலும் இதன் மூலம் கவனம் செலுத்துவதற்கான வாய்ப்புக் கிடைக்கும்; கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் பிரதமர் உரையாற்றினார்.

கிளிநொச்சி மாவட்ட பட்டதாரிகளின் பிரச்சனைகளுக்கும் தீர்வு வழங்கப்படவுள்ளது. இதன்போது மழை நீரை சேமித்து அதனை பயன்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர் சுவாமிநாதன், இராஜாங்க அமைச்சல் விஜயகலா மகேஷ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, சிறிதரன், வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே, மாகாண விவசாய அமைச்சர் சிவநேசன், மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள், அமைச்சின் செயலாளர்கள் பிரதேச சபையின் தவிசாளர்கள் திணைக்களத் தலைவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com