கிளிநொச்சி பட்டதாரிகளுக்கு 23 – 24 ஆம் திகதிகளில் நேர்முகத் தேர்வு

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 354 பட்டதாரிகளுக்கான நேர்முக தேர்வுகள் எதிர்வரும் 23ம் 24ம்திகதிகளில் நடைபெறவுள்ளதாக மாவட்டச்செயலகத்தினால் தெரிவிக்கபபட்டுள்ளது.

நாடாளவிய ரீதியில் கடந்த 2016ம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்துக்கொண்ட இருபதாயிரம் பட்டதாரிகளை சேவைகளில் இணைத்துக்கொள்ளும் பொருட்டு நேர்முக தேர்வுகள் நடைபெறவுள்ளன.

இது தொடர்பில மாவட்ட செயலகத்தினால் தெரிவிக்கப்பட்ட தகவல்களின் படி 31-12-2016 இற்கு முன்னர் படடப்படிப்பை நிறைவு செய்த கிளிநொச்சி மாவட்டத்தைச்சேர்ந்த 354 பட்டதாரிகளுக்கான நேர்முகத்தேர்வுகள் எதிர்வரும் 23, 24ம் திகதிகளில் கிளிநொச்சி மாவட்டச்செயலகத்தில் நடத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இலங்கை பூறாகவும் வேலையற்ற 57 ஆயிரம் பட்டதாரிகள் உள்ளதாகவும் இதில் முதற்கட்டமாக இருபதாயிரம் பட்டதாரிகளை சேவைகளில் இணைத்துக்கொள்ளவுள்ளதாகவும் இதில் சேவைகளில் இணைத்துக்கொள்ளும் படடதாரிகள் இரண்டு வருட பயிற்சிகாலங்கள் சேவையாற்ற வேண்டும் என்பதுடன் மாதாந்தம் இருபதாயிரம்; ரூபா கொடுப்பனவுகள் வழங்கப்படுவதுடன் வயதெல்லை 35 ஆகவும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com