கிளிநொச்சி சந்தைத் தொகுதியில் பெரும் தீ விபத்து – பலகோடி பெறுமதியான பொருட்கள் தீயில் நாசமாகின (2ம் இணைப்பு)

கிளிநொச்சி பொதுச் சந்தையில் இன்று வெள்ளிக்கிழமை 16-08-2016 இரவு ஏற்பட்ட பாரிய தீ காரணமாக புடவை மற்றும் பழக் கடைகள் என்பன முற்றாக எரிந்து அழிந்துள்ளன.
இது தொடர்பில் தெரியவருவதாவது

இன்று இரவு எட்டு முப்பதுக்கும் ஒன்பது மணிக்கும் இடையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்துக் காரணமாக சந்தையின் அனைத்து பழக் கடைகளும், 60க்கு மேற்பட்ட புடவை கடைகளும் முற்றாக எரிந்து அழிந்துள்ளன. இதனால் பல கோடி ரூபா பெறுமதியான சொத்துகளும் தீயில் எரிந்து நாகமாகியுள்ளன.

தீ பிடித்து எரிய தொடங்கிய நிலையில் வேகமாக வீசிய காற்று காரணமாக படிப்படியாக எல்லாக் கடைகளுக்கும் தீ வேகமாக பரவி பெரும் சுவாலை விட்டு எரிந்து கொண்டிருந்த நிலையில் உடனடியாக பொலீஸ் நீர்த்தாங்கி மூலம் தீ அனைக்கும் முயற்சி மேற்க்கொள்ளப்பட்டது. இருந்த போதும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. தொடர்ந்தும் தீ சுவாலை விட்டு எரிந்து வேகமாக பரவியது. பின்னர் இராணுவத்தின் நீர்த்தாங்களும் சேர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுப்பட்டனர் இருந்தும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.

இதனையடுத்து கொக்காவில் இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தின் தீ அணைக்கும் வாகனமும் கொண்டு வரப்பட்டு கடும் பேராட்டத்திற்கு மத்தியில் தீ தொடர்ந்தும் பரவாது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதற்கிடையில் ஏற்பட்ட தீ 60 க்கு மேற்பட்ட புடவை கடைகளையும், அனைத்து பழக்கடைகளையும் எரித்து அழித்துள்ளது. தீயை அணைக்குமும் முயற்சியில் ஈடுப்பட்ட இராணுவத்தினரில் ஜந்து மேற்பட்டவர்கள் தீக் காயங்களுக்குள்ளும் உள்ளாகியுள்ளனர்.

14390833_1074482555935086_1188163634427825440_n

முன்னர் வெளியான செய்தி

சந்தைத் தொகுதியில் பெரும் தீ விபத்து. தற்போது 40 வரையான கடைகள் எரிந்து நாசமாகியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  தீ கட்டுப்பாட்டுக்கு வரவில்லை எனவும் தொடர்ந்தும் தீ பரவிவருவதாகவும் தற்போது அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்ற அதுவேளை மேலதிக அவசர தேவையின் நிமிர்த்தம்  யாழில். இருந்து தீயணைப்பு படைப்பிரிவும் தண்ணீர் வவுசர்களும் விரைந்துள்ளன.
தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் கடும் முயற்சியில் தற்போது இராணுவம் மற்றும் விமான படையினர் ஈடுபட்டுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றன

கிளிநொச்சி சந்தைத் தொகுதியில் சுமார் 100 இற்கும் மேற்பட்ட கடைத் தொகுதிகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.14362553_1593002704059289_8581463109321174034_o

14371798_1431871423494877_974287190_n

14383474_1431871320161554_1089387537_n

14397963_1122316391196142_1269814358_n

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com