கிளிநொச்சி – கிணற்றிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு!

கிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்தில் உள்ள வீடொன்றின் கிணற்றிலிருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. யுத்தம் காரணமாக அகதிகளாக இந்தியாவில் தஞ்சமடைந்திருந்த நிலையில், மீண்டும் கடந்த வருடம் இலங்கை திரும்பிய சின்னையா சுப்பிரமணியம் என்பவரது காணியிலேயே குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த கிணறு நேற்றைய தினம் தூர்வாரப்பட்ட போதே வெடிபொருட்கள் இருந்தமை தெரியவந்தது.

இதன்போது 02 கிளைமோர் குண்டுகள், 1 கைக்குண்டு, 20 மோட்டார் குண்டுகள் மற்றும் தோட்டாக்கள் அடங்கிய 5 பெட்டிகள் என்பன கிணற்றை சுத்தம் செய்தோரால் மீட்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து காணி உரிமையாளரால் அருகில் உள்ள இராணுவ முகாமிற்கு தகவல் வழங்கப்பட்டு, இராணுவத்தினரால் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இன்றையதினம் கிளிநொச்சி பொலிஸாரால் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டு மேலதிக தேடுதலுக்கும், செயலிழக்கச் செய்வதற்கும் கிளிநொச்சி விசேட அதிரடிப் படையினர் அப்பகுதிக்குச் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com