கிளிநொச்சியில் 40% வாக்குப் பதிவு

(17.08.2015) கிளிநொச்சியில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பில் ஈடுபட்டு வருவதாக எமது விசேட செய்தியாளர் தெரிவிக்கின்றார். பிற்பகல் நிலவரப்படி கிளிநொச்சியில் 40% வாக்குப் பதிவுகள் இடம்பெற்றிருப்பதாகவும்

அதிகாலை முதல் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பில் ஈடுபட்டுவருவதாகவும் நண்பகலில் வாக்களிப்பு சற்று மந்தகதியான நிலையில் காணப்பட்டிருந்தபோதும் பிற்பகல் வாக்களிப்பு சுறுசுறுப்பாக நடைபெற்றுவருவதாகவும் அறியமுடிகின்றது.
இதேவேளை கிளிநொச்சி மத்திய கல்லூரி வாக்களிப்பு நிலையத்தில் மக்கள் பெருமளவில் திரண்டு வாக்களித்து வருவதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார். 
கிளிநொச்சி தொகுதி தேர்தல் மத்திய நிலையமாக செயற்படும் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com