சற்று முன்
Home / செய்திகள் / கிளிநொச்சியில் வெள்ள அனர்த்த பாதிப்பிற்குள்ளானவர்களுக்கு கோரப்பட்டுள்ள அவசர உதவிப் பொருட்கள்

கிளிநொச்சியில் வெள்ள அனர்த்த பாதிப்பிற்குள்ளானவர்களுக்கு கோரப்பட்டுள்ள அவசர உதவிப் பொருட்கள்

கிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக கிளிநொச்சி மாவட்டச் செயலக அனர்த்த முகாமைத்துவப் பிரிவினரால் கோரப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் ஏற்பட்டுள்ள இடர் நிலை தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று இரவு 07.30 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. இதன்போதே குறித்த அவசர உதவு பொருட்களுக்கான கோரிக்கை விடப்பட்டுள்ளது.

வெள்ள பேரிடர் அனர்த்தம் காரணமாக கிளிநொச்சி முற்றாக செயலிழந்துள்ளது. இன்னும் இரண்டு தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அவதானிகள் அறிவித்துள்ள நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மற்றும் நல்ன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களிற்கான அடிப்படை உதவிகள் குறித்து தற்போது நடைபெற்ற வீடேச கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.

அவசர தேவையான பொருட்கள்

தார்ப்பாய்கள் (Tarpaulins) – 1500
மணல் பைகள் (Sand Bags) – 10,000
நுளம்பு வலை (Mosquito Net) – 2,500
பாய் (Mat) – 5,000
நில விரிப்பு (Floor Sheet) – 1500
துவாய் (Towel) – 3000
சுகாதார கருவிகள் (Hygiene Kits) – 1500
சாக்குகள் (Sack) – 4 Roll
போர்வைகள் (Bed Sheet) – 1500
நீர் வாளிகள் (Water Bucket) – 1500
இலாம்பு விளக்குகள் (Lamp Kerosne) – 1500
குடைகள் (Umbrella) – 500
குளோரின் மாத்திரைகள் – Chlorine Tablets – 5000

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com