சற்று முன்
Home / செய்திகள் / கிளிநொச்சியில் வெள்ளம் புகுந்த கிணறுகளை கலக்கி இறைக்கும் அமைச்சர் – வைரலாகும் படங்கள்

கிளிநொச்சியில் வெள்ளம் புகுந்த கிணறுகளை கலக்கி இறைக்கும் அமைச்சர் – வைரலாகும் படங்கள்

கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மையில் திடீரென ஏற்ப்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக மக்களால் பயன்படுத்தப்பட்ட கிணறுகள் பல்வேறு அமைப்புகளால் சுத்தமாக்கப்பட்டு வருகின்றன.

இன்று(30) களுத்துறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினரும் வாழ்வாதார அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி பிரதி அமைச்சருமான பாலித தேவப்பெரும குழுவினர் கிளிநொச்சி பரந்தன் பகுதிகளில் கிணறுகளை சுத்தம் செய்யும் முயற்சியில் இறங்கினர்.

சாதாரண மீட்பு குழு போன்று அமைச்சர் என்ற பெருமையை மறந்து கிணற்றில் இருந்து நீரை இறைத்துள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.

மேலும் இம்மாவட்டத்தில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனும் 200 நீர் இறைக்கும் இயந்திரங்களை பிரதேச சபைக்கூடாக வழங்கி வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிணறுகளை இறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
அத்துடன் சில இடங்களில் கடற்படையினர் இராணுவத்தினர் விமானப்படையினரும் கிணறுகளை சுத்தமாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 21 ஆம் திகதி முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்களில் திடீரென ஏற்ப்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பல்வேறு பாதிப்புக்களை சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com