சற்று முன்
Home / செய்திகள் / கிளிநொச்சியில் விவசாயப் பண்ணை வேண்டாம் சாராயக் கடைதான் வேண்டும் – அடம்பிடிப்பின் ஆச்சரியம் !

கிளிநொச்சியில் விவசாயப் பண்ணை வேண்டாம் சாராயக் கடைதான் வேண்டும் – அடம்பிடிப்பின் ஆச்சரியம் !

கிளிநொச்சியில் “முன்மாதிரி விவசாயப் பண்ணை”யை அமைப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவஞானம் தரப்பினர் கடுமையான தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

பதிலாக மதுபானக் கடைக்கு (சாராயக்கடைக்கு) அனுமதி வழங்க வேண்டும் என்று அதே தரப்பினர் தீர்மானம் எடுத்துள்ளனர்.

“விவசாயப் பண்ணையை விட சாராயத் தவணையே அவசியம்” என்றாகி விட்டது.

என்ன செய்வது காலம் அப்படி!

இதையிட்டு சிறிதரனை ஆதரித்து வந்த பலர் சீற்றமடைந்திருக்கிறார்கள்.

இந்த இரண்டு விடயங்கள் தொடர்பாகவும் கடந்த 03.05.2018 அன்று கூட கரைச்சிப் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பேசப்பட்டது.

விவசாயப் பண்ணை அமைப்பதை எதிர்த்து மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை உள்பட அதே அணியைச் சேர்ந்த ஓரிருவர் தமது எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்.

அத்துடன், ஏற்கனவே இந்தப் பண்ணை அமைக்கும் முயற்சிக்குப் பல வழிகளிலும் சிறிதரன் அணியினர் முட்டுக்கட்டைகளையும் போட்டு வருகிறார்கள்.

ஆனால், இந்த விடயத்தில் வட மாகாண முதலமைச்சர் சரியான முறையில் தீர்மானங்களை எடுத்துள்ளார்.

எனினும் முதலமைச்சரின் பண்ணைக்கான ஆதரவு நடவடிக்கைகளை குழப்புவதற்கு சிறிதரன் அணி கடுமையாகப் பாடுபடுகிறது.

அமைக்கப்படும் விவசாயப் பண்ணை பலருக்கான வேலை வாய்ப்பை வழங்கக் கூடியது. அத்துடன் ஏனையோருக்கான முன்மாதிரிப் பண்ணையாகவும் அமையும்.

சாராயக் கடை?

ஆனால், சாராயக் கடை அமைப்பது அவசியமெனவும் அப்படிச் செய்தால்தான் சட்டவிரோத மது உற்பத்தி (கசிப்பு உற்பத்தி) யும் கஞ்சாப் பாவனையும் கட்டுப்பாட்டில் வரும் என்றும் இதற்கு விளக்கமளித்திருக்கிறார் சிறிதரன்.

கிளிநொச்சி மாவட்டம் வறுமையில் முன்னணி வகிக்கிறது. கல்வியில் கடைசி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதனை எப்படிச் சீர்ப்படுத்துவது என்று சிந்திப்பற்கும் பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் பிரதேச – மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் கூடிய கவனம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், அப்படிச் செய்யப்படவில்லை.

விவசாயப் பண்ணைகள் வறுமை நிலையைப் போக்குவதற்கு உதவும்.

சாராயக்கடைகள் வறுமையை மேலும் அதிகரிக்கும்.

அதை யார் நடத்தினாலென்ன? சமூகத்தை சீரழிக்கவே வழிவகுக்கும்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com