சற்று முன்
Home / செய்திகள் / கிளிநொச்சியில் பாடசாலை அலுவலகத்திற்கு தீ ..

கிளிநொச்சியில் பாடசாலை அலுவலகத்திற்கு தீ ..

கிளிநொச்சி கோணாவில் மகா வித்தியாலயத்தின் அதிபர் அலுவலகத்திற்கு விசமிகளால் தீ வைக்கப்பட்டு அனைத்து ஆவணங்களும் எரிக்கப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் இன்று (13) அதிகாலை ஐந்து மணியளவில் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இன்று காலை 6.30 மணியளவில், க.பொ.த சதாரண தர மாணவர்களுக்கு இடம்பெறுகின்ற விசேட வகுப்புக்கு மாணவர்கள் பாடசாலைக்கு சென்ற போது அதிபர் அலுவலகத்திற்குள்லிருந்து புகை வெளியேறுவதனை அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து மாணவர்கள் உடனடியாக வகுப்புக்கு பொறுப்பான ஆசிரியருக்கு அறிவித்துள்ளனர். இதனையடுத்து மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என ஒன்றுசேர்ந்து தீயை அணைத்து பாதுகாக்க கூடிய ஆவணங்கள் மற்றும் பொருட்களை பாதுகாத்துள்ளனர்.

அதிபர் அலுவலகத்தின் கதவு உடைக்கப்பட்டுள்ளது. எனவே கதவினை உடைத்து உள்ளே சென்ற விசமிகள் மண்ணெண்ய் ஊற்றி தீ வைத்திருக்கலாம் என பொலீஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். மண்ணெண்ய் மணம் வீசுவதோடு தீப்பெட்டி ஒன்றும் அலுவலகத்திற்குள் காணப்பட்டுள்ளது.

இந்த தீ காரணமாக பாடசாலை மாணவர்களின் பிறப்பு அத்தாட்சிப் பத்திரம், பரீட்சை பெறுபேறு ஆவணங்கள், ஆசியர்கள் தனிப்பட்ட விடயங்கள் அடங்கிய கோவைகள், மாணவர்களின் வரவு பத்திரங்கள் என அனைத்து ஆவணங்களும் எரிந்து அழிந்துள்ளன. ஆனால் பாடசாலையின் கணக்கு நடவடிக்கைகள் அடங்கிய ஆவணங்கள் கொண்ட அலுமாரி ஒன்று காப்பற்றப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர் இதயசிவதாஸ் தெரிவித்தார்.

கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர், கரைச்சிக் கோட்டக் கல்வி அதிகாரி ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று நிலைமைகளை பார்வையிட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com