கிளிநொச்சியில் பதற்றம் – பொலிஸாருக்கும் மக்களுக்குமிடையில் முறுகல்நிலை

14725742_677054349125197_641459629101759449_nகிளிநொச்சி ஏ9 வீதி வைத்தியசாலைப் பகுதியில் வாகனம் ஒன்று தாக்கப்பட்டதாகவும் அதனையடுத்து பெருமளவில் பொலிசாரும் விசேட அதிரடிப்படையினரும் அங்கு குவிக்கப்பட்ட நிலையில் பொலிசார் மற்றும் இளைஞர்களுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதாகவும் இதனால் அப் பிரதேசத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதுடன் சமர விக்கிரம என்ற பொலிஸார் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

வடக்கின் பல பகுதிகளிலும் ஹர்த்தால் அனுஷ்ட்டிக்கப்பட்டுவந்த நிலையில் கிளிநொச்சியிலும் அனுஷ்ட்டிக்கப்பட்டிருந்தது.14732175_677054259125206_3357223553760593831_n

இதன் போது,  அங்கு ஒன்று கூடிய இளைஞர்கள் போத்தல்களை நடுவீதியில் உடைத்தும் வீதியின் நடுவில் இருந்தும் தமது எதிர்ப்பை வெளிக்காட்டியிருந்தனர்.

இதனையடுத்து, அங்கு கடமையில் இருந்த பொலிசார் ஒருவர் மீது இனம் தெரியாத நபர் ஒருவரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து பொலிசாருக்கும் மக்களுக்கும் இடையில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

பின்னர் கலகம் அடக்கும் பொலிசார் இறக்கப்பட்டு நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போதிலும் வீதியில் டயர்களை எரித்தும் வீதியை மறைத்தும் தமது எதிர்ப்பை பொதுமக்கள் வெளிப்படுத்தும் நிலையில் அங்கு பெரும் பதற்ற நிலை காணப்படுவதாக அங்கு இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.14691051_677054202458545_5615119133906203629_n 14713535_677054245791874_145368336559958960_n

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com