கிளிநொச்சியில் தேர்தல் விதிமுறை மீறல்கள் இதுவரை இடம்பெறவில்லை :

news

(25.07.2015) கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை தேர்தல் விதிமுறை மீறல்கள் தொடர்பாக எதுவித முறைப்பாடுகளும் பதிவாகவில்லை என்று, கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.
 
மேலும் கிளிநொச்சி மாவட்டத்தில் 79 ஆயிரத்து 93 வாக்காளர்கள் உள்ளனர் இவர்கள் வாக்களிக்க கூடிய வகையில் 96 வாக்களிப்பு நிலையங்கள் அமையவுள்ளதுடன் ஏழு வாக்கெண்ணும் நிலையங்களிலும் வாக்கெண்ணும் பணிகள் இடம்பெறவுள்ளன.
 
அத்துடன் கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளிலும் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திலும் என நான்கு தேர்தல் முறைப்பாட்டு நிலையங்கள் அமைக்கப்பட்டு அதற்கான உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
மேலும் இந்நிலையில் இதுவரை எந்த வகையான முறைப்பாடுகளும் பதிவாகவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com