கிராமிய இணையமாய் வாகீசம் எனும் நாமம் சூடி இன்று எட்டு ஆண்டுகள் பயணித்துவிட்டோம்

vakeesam-first-template

வணக்கம் உறவுகளே !
இன்றைய நாள் ஒன்றில்தான் வாகீசம் இணையம் கிராமிய இணையமாக http://vakeesam.blogspot.com/,  https://vakeesam.wordpress.com/கோண்டாவில் கிராமத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டது. 2008 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 27 ஆம் திகதி வலைத்தளம் ஒன்றின் ஊடக ஆரம்பமான எமது பயணம் 12.05.2010 அன்று vakeesam.com என பதிவுசெய்யப்பட்டு ஊரின் பல்வேறு நிகழ்வுகளை தொடர்ச்சியாக பதிவுசெய்துவந்தது. பின்னர் ஊர்கடந்து இலக்கிய முயற்சிகளையும் பதிவுசெய்துவந்த வாகீசம் கடந்த 2013 ஆம் ஆண்டு ஐப்பசி 27 முதல் புலம்பெயர் தேசம் ஒன்றிலிருந்து தினசரி செய்தி இணையமாக உங்களோடு உறவாடியது.vakeesam-first-web-banner

இலங்கை அரசின் சட்டவரண்முறைகளுக்கு உட்பட்டு பதிவுசெய்யப்பட்ட ஒரு செய்தி இணையமாக வாகீசத்தை வெளிக்கொணரும் முயற்சியின் பயனாக கடந்த தைப்பொங்கல் தினமான 14.01.2016 இல் இருந்து யாழ்ப்பாணத்திலிருந்து உத்தியோகபூர்வமான செய்தி இணையமாக வாகீசம் பரிணமிக்கத் தொடங்கியிருக்கிறது.

vakeesam-first-logo
கிராமிய இணையமாக வாகீசம் தொடங்கப்பட்ட இன்றுடன் எட்டு ஆண்டுகள் புர்த்தியாகின்றன. வாகீசம் எனும் நாமம் சூடி எட்டு ஆண்டுகள் கடந்த இத்தினத்தை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்வுறுகின்றோம்.
அவ்வகையில் எமக்கு வழிகாட்டிகளாய் இருக்கும் மூத்த ஊடகவியலாளர்கள், படைப்பிலக்கியகார்கள், மற்றும் எம்மோடு பணியெய்தும் ஊடக நண்பர்கள், வாசகர்கள் விளம்பரதாரகள் அனைவருக்கும் இத்தருணத்தில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
வாகீசம் உங்களுக்காய் தொடர்ந்தும் பயணிக்கும் என்ற உறுதியுடன்.
நன்றி
வாகீசம் இணையக்குடும்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com