கிந்தோட்டையில் கலவரம் ! 19 பேர் கைது!

காலி கிந்­தோட்டையில் நேற்று முன்­தினம் இடம்­பெற்ற மோதலையடுத்து இடம்பெற்ற கலவரத்தில்  படு­கா­ய­ம­டைந்த ஒருவர் காலி கரா­ப்பிட்­டிய வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார். அத்­துடன் சம்ப­வத்­துடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என்ற சந்­தே­கத்தின் பேரில் இதுவரை 19 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் இன்று காலை வரை பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்­பவம் தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை கிந்­தோட்டை விதா­ன­கொட பிர­தே­சத்தில் கைக்­கு­ழந்­தை­யுடன் வீதியில் நடந்­து­சென்ற முஸ்லிம் பெண்­ணொ­ரு­வரை மோட்டார் சைக்­கிளில் பய­ணித்த ஒருவர் மோதி­யுள்ளார். அவ்­வி­பத்து இடம்­பெற்ற வேளையில் அசம்­பா­விதம் ஏதும் இடம்­பெ­றா­த­போதும் அதன் தொடர்ச்­சி­யா­கவே நேற்று முன்­தினம் இரவு அங்கு அமை­தி­யின்மை ஏற்­பட்­டுள்­ளது.

நேற்­று­முன்­தினம் மாலை வேளையில் முஸ்லிம் இளை­ஞர்கள் சிலர் அப்­பி­ர­தே­சத்தில் சிங்­கள மக்கள் செறிந்து வாழும் பிர­தே­சத்­தி­னூ­டாக பய­ணித்­துள்­ளனர்.  இதன்போது அந்த இ­ளை­ஞர்­களை சிங்­கள இளை­ஞர்கள் தாக்­கி­யுள்­ளனர். அதனைத் தொடர்ந்து அங்கு அமை­தி­யின்மை ஏற்­பட்­ட­துடன் இரு தரப்பினரும் மோதிக்­கொண்­டுள்­ளனர்.

இதே­வேளை குறித்த சம்­ப­வத்­துடன் தொடர்­பு­பா­டாத ஒருவர்  மஹ்ரிப் தொழு­கைக்குச் சென்று வீடு திரும்­பிக்­கொண்­டி­ருந்த வேளையில் வழி­ம­றிக்­க­பட்டு தக்­கப்­பட்­டுள்ளார். எனவே  படு­கா­யங்­க­ளுக்­குட்­பட்ட அவர் கார­பிட்­டிய வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்சை பெற்று வரு­கிறார்.

மேலும்  அங்கு அமை­தி­யின்மை  ஏற்­பட்­டதை அறிந்­து­கொண்ட பொலிஸார் சம்­பவ இடத்­திற்கு விரைந்து நிலை­மையை கட்­டுப்­பாட்டுக்குள் கொண்­டு­வ­ரு­தற்கு முயற்­சித்­தனர். மேலும் விசேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரும் வர­வ­ழைக்­கப்­பட்டு பாது­காப்பு கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டனர்.

இதனையடுத்து இரவு 10.30 மணி­ய­ளவில்  நிலைமை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ள­துடன் சம்­ப­வத்­துடன் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் என்ற சந்­தே­கத்தின்  பேரில் 19 பேரை காலி பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

இந்நிலையில், இன்று காலை 9 மணிவரை அப் பகுதியில் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் நிலைமை சுமுகமடைந்துள்ள நிலையில் ஊரடங்குச்சட்டம் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதே­வேளை பிர­தே­சத்தில் அமைதியை ஏற்படதையடுத்து நேற்று காலை காலி பொலிஸ் நிலையத்தில் சமரசப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. சம்பவத்தையடுத்து விசேட அதிரடிப்படையினர் தொடர்ந்தும் அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com