காஷ்மீர் தீவிரவாதத் தாக்குதல் – 17 பேர் பலி 30 பேர் காயம் – முகாமிற்கு தீ வைத்த பின்பே தாக்குதல் தொடங்கினர் தீவரவாதிகள்

kesavan_uri_301468_3014696fகாஷ்மீரில் பாரமுல்லா மாவட்டத்தின் உரி என்ற பகுதியில் ராணுவ வீரர்கள் தங்கியிருந்த முகாம்களுக்கு பயங்கரவாதிகள் முதலில் தீ மூட்டினர், இதனையடுத்து வெளியே வந்த வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டாலும் இன்னும் 2-3 தீவிரவாதிகள் அங்கு பதுங்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுவதால் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.

தீவிரவாதிகள் தாக்குதலுக்கு 17 வீரர்கள் பலியாக 30 பேர் காயமடைந்துள்ளனர். பலியான வீரர்கள் 6 பிஹார் ரெஜிமெண்டைச் சேர்ந்தவர்கள்.

இன்று காலை கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டுக்கருகே 6 கிமீ தொலைவில் உள்ள ராணுவ முகாம்களுக்கு தீவிரவாதிகள் தீ வைத்ததாகவும் இதனையடுத்து வெளியே வந்த வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தீக்காயங்கள் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கையை வைத்து இந்த தீவைப்பு சம்பவம் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com