“காவி அடி … கழகத்தை அழி…” – கவிதை வெளியிட்ட பத்திரிகை ஆசிரியர் பதவி நீக்கம்

அ.தி.மு.க வின் அதிகாரபூர்வ பத்திரிகை நமது எம்.ஜி.ஆர். கடந்த 12 ஆம்திகதி அன்று அந்தப் பத்திரிகை மத்தியில் ஆளும் பா.ஜ.க வை கடுமையாக விமர்சித்து “காவி அடி … கழகத்தை அழி…” என்ற தலைப்பில் கவிதை ஒன்றை வெளியிட்டிருந்தது.

குறித்த கவிதை தொடர்பில் கடந்த நான்கு நாட்களாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவந்தன. இந்நிலையில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழாக செயல்பட்டுவந்த “நமது எம்.ஜி.ஆர்” ஆசிரியராக இருந்த மருது அழகுராஜ் அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

நிர்வாக காரணங்களுக்காக அவர் நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக சசிகலா அணி துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து மருது அழகுராஜிடம் கேட்டபோது, அந்தச் செய்தியை உறுதிசெய்த அவர், “2008ஆம் ஆண்டில் முதல்வர் ஜெயலலிதாவால் பணியில் அமர்த்தப்பட்டேன். இப்போது எழுதுகோல் பறிக்கப்பட்டிருக்கிறது” என்று மட்டும் தெரிவித்தார்.

இதேவேளை சென்னையில் இன்று (16) செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரனிடம் செய்தியாளர்கள் இது குறித்துக் கேட்டபோது, “நிர்வாகத்தின் கொள்கைகளை மீறி அவர் செயல்பட்டதால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்” என்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com