காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி திரையுலம் போராட்டம்

*`விவசாயமும் விவசாயிகளும் நன்றாக இருக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்திரமாக மூட வேண்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இந்த நான்கு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த தீர்மானத்தின் நகல் ஆளுநரிடம் வழங்கப்படும். போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி’ என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் கூறினார்.

*இதனிடையே, சத்யராஜ் பேச வேண்டும் என்று அங்கிருந்தவர்கள் முழக்கமிட்டதால் போராட்டக் களம் பரபரப்பானது. அவர்களின் முழக்கத்திற்கு இணங்க சத்யராஜ் பேசைனார். ‘காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும், ராணுவமே வந்தாலும் அஞ்சமாட்டோம், குரல்கொடுக்க தைரியம் உள்ளவர்கள் தமிழர்களின் பின்னால் நில்லுங்கள்; இல்லையேல், ஒளிந்துகொள்ளுங்கள்” என்று ஆவேசமாக முழக்கமிட்டார்.

*போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி கூறிய பெஃப்சி தலைவர் செல்வமணி, காவிரி மேலாண்மை வாரியம் குறித்தும் ஸ்டெர்லைட் விவகாரம் குறித்தும் ஒட்டுமொத்த திரைத்துறை சார்பில் மத்திய மாநில அரசுக்கு சில கோரிக்கைகளை முன்வைத்தார்.

ஒரே மேடையில் இளையராஜா, வைரமுத்து…

 

ரஜனிகாந்த் போராட்டக் களத்திற்கு வந்தடைந்தார். கமல்ஹாசனுக்கு கைக்கொடுத்து அவர் அருகில் அமர்ந்துகொண்டார். அறவழிப் போராட்டம் குறித்தும் தமிழகத்தின் இன்றைய சூழல் குறித்தும் இருவரும் பேசி வருகின்றனர். நடிகர் சங்க செயலாளர் என்ற முறையில் விஷால் ரஜினிகாந்தை போராட்டக் களத்துக்கு வரவேற்றார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், வைரமுத்து, விஜய், சிவகார்த்திகேயன் என அடுத்தடுத்த இருக்கைகளில் அமர்ந்துள்ளனர். இருபத்தைந்து வருடங்களுக்குக்கு பிறகு இளையராஜாவும் வைரமுத்துவும் ஒரே ஃப்ரேமில் போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com