காவலருக்காய் தலைசாய்த்த நீதிபதி – கதறி அழுதார்

நல்லுர் ஆலய பின் வீதியில் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் கொல்லப்பட்ட தனது மெய்ப்பாதுகாப்பாளரான பொலிஸ் உத்தியோகத்தரின் மறைவினை தாங்க முடியாது நீதிபதி இளஞ்செழியன் கதறி அழுதுள்ளார். நேற்றைய சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஹேமசந்திர (வயது 58)  இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த மெய்பாதுகாவலர் நீதிபதியின் நம்பிக்கைக்குரிய மெய்பாதுகாவலராக கடந்த 17 வருடங்கள் கடமையாற்றிவந்துள்ளார். இந்நிலையில் குறித்த மெய்ப்பாதுகாப்பாளரின் மனைவியைக் கண்ட நீதிபதி இளஞ்செழியன் அவரின் காலில் விழுந்து கதறி அழுதுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com