கால அவசாகம் கோரும் இலங்கை அரசாங்கம் இதுவரை காலமும் என்ன செய்தது என்பதை அறியவேண்டும்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசத்தினை கொடுக்கும் போது இவ்வளவு காலமும் எடுத்த நடவடிக்கைகள் எந்தளவிற்கு மக்களுக்கு நன்மை கிடைத்துள்ளதென ஆராய்ந்து பார்க்க வேண்டுமென குறிப்பிட்ட வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் இலங்கை அரசாங்கத்தினர் வாராந்தம் மற்றும் மாதாந்தம் என்ன செய்கின்றார்கள் என்பதனை ஐ.நா. அறியக்கூடியவாறு ஏதாவது ஒரு செயற்றிட்டத்தினை வகுக்குவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை குறித்து ஐ.நா. மனித உரிமை பேரவையில் கடந்த 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் இரண்டு வருட கால அவகாசத்தை கோரும் முனைப்பில் அரசாங்கம் ஈடுபட்டுள்ள நிலையில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்குவதாக இருந்தால், ஐ.நாவின் நேரடி கண்காணிப்பிலேயே வழங்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அண்மையில் ஊடகங்களிற்குக் கருத்து வெளியிட்டடிருந்தார்.
இது குறித்து யாழில் இன்று (புதன்கிழமை) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசிற்கு மேலும் இரண்டு வருட கால அவசாகசம் வழங்கும் செயற்பாடானது தமிழ் மக்களின் பிரச்சினைகளை மறக்கடிக்கச் செய்யும் ஒரு செயற்பாடாகவே இருக்கும் என வடக்கு குறிப்பிட்ட அவர் எவ்வாறாயினும் கால அவகாசம் வழங்குவதில் தமக்கு எவ்வித உடன்பாடு இல்லையெனவும் குறுகிய காலமும் அதிகளவான மேற்பார்வையுமே முக்கியமானதென வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com