கால அவகாசம் வழங்க கூட்டமைப்பு தீர்மானிக்கவில்லை : புதுக் கதை சொல்லும் சிவாஜி

SAMSUNG CAMERA PICTURES

ஜெனீவாவில் நடைபெற்று வருகின்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமையின் 34 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானத்தில், கால அவகாசம் வழங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது என்ற கருத்து தவறானது என வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று இடம்பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கம், மாகாண சபை உறுப்பினர்களுக்கும் இடையிலான அவசர சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

குறித்த கூட்டத்தில் 30?1 தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட வேண்டும். ஐ.நா. ஆணையாளர் அலுவலகம் ஒன்று கொழும்பில் அமைக்கப்பட்டு விடயங்களை அவதானிக்க வேண்டும்.

இந்நிலையில் தொடர்ந்தும் இலங்கை அரசாங்கம் இழுத்தடிக்கும் பட்சத்தில் சர்வதேச விசாரணைணை உடனடியாக நடத்த வேண்டும் என்ற தீர்மானமே நேற்று வவுனியாலில் நடைபெற்றி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com