சற்று முன்
Home / செய்திகள் / கால்பந்தாட்ட நடுவர் மீது வாள்வெட்டு- இளவாலையில் சம்பவம்

கால்பந்தாட்ட நடுவர் மீது வாள்வெட்டு- இளவாலையில் சம்பவம்

யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விளான் சந்தி அராலி – தெல்லிப்பழை வீதியில் கால்பந்தாட்ட நடுவர் ஒருவர் வாள்வெட்டுக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளார்.

நேற்று இரவு 7.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் வீதியால் பயணித்த நடுவர் மீது வாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

இதன் போது உடும்பிராயைச் சேர்ந்த ஜெயக்குமார் (வயது 58 ) என்பவரே வாள்வெட்டுக்குள்ளாகிப் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பில் இளவாலைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com