சற்று முன்
Home / செய்திகள் / காலைக்கதிர் செய்தியாளர் மீது தாக்குதல்

காலைக்கதிர் செய்தியாளர் மீது தாக்குதல்

காலைக்கதிர் பத்திரிகையின் பிரதேச செய்தியாளரும் பத்திரிகை விநியோகஸ்தருமான செல்வராசா இராஜேந்திரன் (வயது 55) இன்று (28) அதிகாலை கும்பல் ஒன்றின் தாக்குதலுக்கு இலக்காகியிருக்கிறார்.

5 மோட்டார் சைக்கிள்களில் வந்த 10 பேர் கொண்ட கும்பலே தாக்குதலை முன்னெடுத்துள்ளது. தாக்குதலில் படுகாயமைடந்த அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை துண்டிச் சந்தியில் இன்று அதிகாலை 3.45 மணியளவில் இந்த தாக்குதல் இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

பத்திரிகை விநியோகத்துக்கு சென்று திரும்புகையில் கொழும்புத் துறை துண்டிச் சந்தியில் வழிமறுத்த 10 பேர் கொண்ட கும்பல் சராமாரியாகத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

“கும்பலைச் சேர்ந்த 10 பேரும் முகத்தை துணியால் மறைத்திருந்தனர். காலைக்கதிர் பத்திரிகை – டான் ரீவியின் பெயர்களைச் சொல்லியே தாக்குதல் நடத்தினர்.

அவர்களிடம் கைக்கோடாரி, வாளகள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்கள் காணப்பட்டன. எனது குடும்ப நிலையைக் கூறி மண்டியிட்டதனால்தான் என்னை உயிருடன் விட்டுச் சென்றனர்” என்று தாக்குதலுக்குள்ளான அவர் தெரிவித்தார்.

தாக்குதலிற்கான காரணமெதுவும் தெரியவராத போதும் தமிழரசுக்கட்சியின் செயற்பாடுகளை தொடர்ந்தும் கடுமையாக விமர்சிப்பதாக காலைக்கதிர் பத்திரிகை மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தது.

குறிப்பாக தமிழரசுக்கட்சியின் வடமாகாணசபை உறுப்பினர் ஒருவர் தமிழரசுக்கட்சியை இரண்டாகப்பிளக்க சதி நடப்பதாக காலைக்கதிரையும் அதன் ஆசிரியரையும் முன்னிறுத்தி அண்மைய நாட்களாக தொடர்ச்சியாக கருத்துக்களை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com