சற்று முன்
Home / செய்திகள் / கால வரையறையற்ற போராட்டத்திற்குத் தயாராகும் பட்டதாரிகள்

கால வரையறையற்ற போராட்டத்திற்குத் தயாராகும் பட்டதாரிகள்

வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வு கிடைக்கப்பெறாமையினால் எதிர்வரும் நாட்களில் காலவறையற்ற போராட்டங்களில் ஈடுபட போவதாக அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் ஏ. எச். ஜெசீர் தெரிவித்தார்.

வேலையற்ற பட்டதாரிகளின் தற்போதைய நிலைமை தொடர்பாக தொலைபேசி ஊடாக கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு ஊடகவியலாளரிடம் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.
அதாவது எமக்கு எந்த தரப்பும் வேலை பெற்று தருவதாக இல்லை. தேர்தல் காலங்களில் வாக்குறுதிகளை அள்ளி வீசி விட்டு பின்னர் வாய் மூடி மௌனமாக இருக்கின்றனர்.

நாம் அவ்வப்போது போராட்டங்களை முடுக்கி விடுகின்றபோது மாத்திரம் சில கண் துடைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றார்கள்.பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டு உள்ள 2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு தீர்வு கொடுக்கின்ற எந்தவொரு வேலை திட்டமும் இல்லாதது மிகவும் மன வேதனையை தருகின்றது.

இவ்வரவு – செலவு திட்டத்தில் கட்டாக்காலி நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு 100மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கி உள்ளனர். ஆனால் பட்டதாரிகளின் பிரச்சினையை தீர்ப்பதற்கு எந்தவொரு நிதி ஒதுக்கீடும் இதில் கிடையாது. பட்டதாரிகளின் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஏதுவான பட்ஜெட்டை கொண்டு வருவார் என்று வேலையில்லா பட்டதாரிகளின் பிரதிநிதிகளுக்கு நிதியமைச்சர் வாக்குறுதி வழங்கி இருந்தபோதிலும் எதுவுமே நடக்கவில்லை.

நாம் கடந்த இரு வருடங்களுக்கு இடையில் பல தடவைகள் சந்தித்து பேசியபோதிலும் வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வை அவர்கள் பெற்று தருவதாக இல்லை. தேர்தல் காலங்களில் வாக்குறுதிகளை அள்ளி வீசி விட்டு பின்னர் வாய் மூடி மௌனமாக இருக்கின்றனர். நாம் அவ்வப்போது போராட்டங்களை முடுக்கி விடுகின்றபோது மாத்திரம் சில கண் துடைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றார்கள்.எனவே எமது போராட்டம் தொடரும் என கூறினார்.


About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com