காலன் ஏமாற்றிவிட்டான் – ஓய்ந்தது புரட்சிக் குரல் – என்னை நினைத்து யாரும் கலங்கக் கூடாது…

ஈழத்தின் புகழ்பூத்த புரட்சிப்பாடகர் S G சாந்தன்  இயற்கை எய்திவிட்டார். (26.02.2017)

இன்று காலை அவர் மரணித்துவிட்டதாக அவரது மகனது முகநூல் பதிவு ஒன்றினை ஆதாரமாக வைத்து செய்திகள் வெளியிடப்பட்டடிருந்தன. இந்நிலையில் யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகம் பாடகர் சாந்தனின் மரணம் தொடர்பான செய்திஉண்மையல்ல அவரிற்கு உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக தகவல் வெளியிட்டிருந்ததோடு 9 ஆம் இலக்க விடுதியில் அவரிற்கு சிகிச்சையளிக்கும் புகைப்படங்களும் வெளியிடப்பட்டிருந்தன.

இந்நிலையில் இன்று பிற்பகல் 02.10 மணிக்கு பாடகர் சாந்தனின் உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவமனைத் தகவல்கள் செய்திவெளியிட்டுள்ளன.

தமிழீழ விடுதலைப்புலிகளின் ரதான பாடகராக இருந்த சாந்தன் புலிகள் இயக்கத்திற்காகஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியிருக்கின்றார். விடுதலைப் புலிகளின் சமர்க்களங்களின் வெற்றிப் பாடல்களையும், எழுச்சிப் பாடல்களையும் பாடிய சாந்தன் புலிகளின் தளபதிகளின் வீரச்சாவுப் பாடல்களையும் பாடியிருக்கிறார்.

புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் மரணமடைந்தபோது பாடிய நித்திய புன்னகை அழகனும் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் மரணமடைந்தபோது பாடிய நித்திய வாழ்வினில் நித்திரை கொள்பவன் செத்திடப் போவதில்லை என்ற பாடலும் எல்லோர் கண்களையும் கலங்கிடச் செய்தது.

விடுதலைப் புலிகளின் பாடல்களிற்கு அப்பால் சிறந்த பக்திப்பாடல்களையும் பாடிய சாந்தனின் பிட்டுக்கு மண் சுமந்த பெருமானர் பாடல் மிகப் பிரபலமானது.

பிரபலமான நட்சத்திரப் பாடகராக மட்டுமல்லாது சிறந்த நாடக நடிகராகவும் சாந்தன் இருந்திருக்கின்றார்.  இவர் நடித்த அரிச்சந்திர மயான காண்டம் இவரது நடிப்புத்திறனுக்குச் சான்றாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

கொழும்பு, செக்கடித் தெரு கதிரேசன் கோவிலில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றைப் பார்க்கச் சென்ற போது அங்குதான் அவருக்கு முதல் பாடல் பாடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தற்செயலாக நடைபெற்ற இச் சம்வம்தான இவரை புகழின் உச்சிவரை கொண்டுசொன்றது.

‘மருதமலை மாமணியே முருகையா’ என்ற பாடலைப் பாடி மிகுந்த வரவேற்பைப் பற்றுக் கொண்டார். இது இவரது முதல் மேடை அனுபவமாகவும் அமைந்தது. இதன் பின்னர் இவர் வீதியில் செல்லும் போது இவரை அழைத்து தம்பி அந்த ‘மருதமலைப் பாடலை’ பாடு என்று இவரது ரசிகர்கள் கேட்கத் தொடங்கி விட்டார்கள். இதன் பின்னர் அந்தத் தெருவுக்கு வரும் கத்தார் வீடு ஜேசுரட்ணம் என்பவர் இவரை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு அழைத்துச் சென்று சிறுவர் மலரில் பாடவைத்தார். அதிலிருந்து வானொலி நிகழ்ச்சியில் நாடகத்திலும் நடிக்க ஆரம்பித்திருந்தார். 1977 இல் கிளிநொச்சிக்குக் குடிபெயர்ந்தார். 1981 இல் கண்ணன் இசைக்குழுவுடன் இணைந்து பாட ஆரம்பித்தார். அந்த இசைக்குழுது 1982 இல் கலைக்கப்பட்டதன் பின் தனது பெயரிலேயே சாந்தன் கோஷ்டி (சாந்தன் இசைக்குழு) என்ற பெயரில் இசைக்குழு ஒன்றை ஆரம்பித்தார்.

இறுதி யுத்தத்தின்போது படையினரால் கைதுசெய்யப்பட்ட சாந்த புனர்வாழ்வு முகாமிலிந்து வெளியேறியதும் பக்திப் பாடல்கள் மீது முழுக் கவனம் செலுத்தினார். எனினும் படையினரி்ன் நெருக்குதல்களினால் அவர்களின் மேடைகளிலும் அரசியல் பிரச்சார கூட்டங்களிலும் பாட நிர்ப்பந்திக்கப்பட்ட சாந்தனை சில தரப்பினர் விமர்சிக்கவும் தவறியிருக்கவில்லை.

பல மாதங்களாக நோய்வாய்ப்பட்டடிருந்த நிலையில் அவரது மரணம் நிகழ்ந்துவிட்டதான செய்தி சாந்தன் பாடிய பாடல்களை மீள நினைத்துக் கொள்கின்றது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com