காலனை வெல்லப் பிரார்த்திப்போம் – பாடகர் சாந்தன் தொடர்ந்தும் சிகிச்சைப்பிரிவில்


ஈழ எழுச்சிப் பாடகர் சாந்தன் மரணிக்கவில்லை என்றும் அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டுவருவதாகவும் யாழ் போதனா வைத்தியசாலை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சிறுநீரகம் செயலிழந்தநிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்த பாடகர் சாந்தன் மரணமடைந்துவிட்டதாக அவரது மகன் தனது முகநூலில் பதிவிட்டதனை ஆதராமாக வைத்து பாடகர் சாந்தன் மரணமடைந்துவிட்டதாக செய்திகள் வெளியிடப்பட்டநிலையில்,

இது தொடர்பில் யாழ் போதனா வைத்தியசாலையில் சாந்தனுக்கு சிகிச்சையளிததுவந்த மருத்துவர்களிடம் நாம் தொடர்புகொண்டு கேட்டபோது, பாடகர் சாந்தன் மரணமடையவில்லை எனவும் அவரது உடல்நிலை மோசமடைந்திருப்பதாகத் தெரிவித்த அவர்கள் சாந்தனுக்கு செயற்கைச் சுவாசம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

பாடகர் சாந்தனிற்கு தற்போது 09 ஆம் இலக்க சிகிச்சை அறையில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com