கார் வாங்க யாருக்குத்தான் ஆசையில்லை – பஜாஜ் கார்கள் இலங்கையில் மூன்று இலட்சமாம் !

Bajaj-Qute-RE60-launch-Turkey-6

காரில் சவாரி செய்ய யாருக்குத்தான் ஆசையில்லை. முச்சக்கரவண்டியை விடக் குறைந்த விலையில்,டாடா நானா கார்கள் இந்தியாவில் ஒரு இலட்சம் ரூபாய்க்கு விற்பனைக்கு வந்தபோது இலங்கையில் அவற்றை மூன்று நான்கு இலட்சம் ரூபாய்க்கு வாங்கிவிடலாம் என்ற ஆவல் கார்வாங்குவதை வெறும் கனவாகவே கண்டுவந்த ஒவ்வொருவருக்கும் இருந்திருந்தது. ஆனால் இலங்கையில் ஏனைய கார்களை இறக்குமதி செய்யும் தரகு நிறுவனங்கள் என்ன நினைத்தனவோ தெரியவில்லை நானோ கார் தங்கள் பிழைப்பில் மண்அள்ளிப் போட்டுவிடும் என முழுமையாக நம்பின. அதன் பின் நடந்த அரசியல் சதுரங்கங்களால் நானோவின் விலை 11 இலட்சங்களைத் தாண்டியது.

தற்போது வாகனங்களின் விலையினை பன்மடங்காய் எகிறச் செய்துள்ள இலங்கை அரசு  பஜாஜ் நிறுவனத்தின் தயாரிப்பான நான்கு சக்கர வண்டியொன்றைக் கொள்வனவு செய்வதற்கு வழிசமைத்துக்கொடுப்பதாக, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, அறிவித்திருந்தார். இந்நிலையில், அவ்வாகனம் தொடர்பான விவரங்கள், தற்போது வெளியாகியுள்ளன.

3 இலட்சம் ரூபாய்க்கு கொள்வனவு செய்யக்கூடியதாக ஆட்டோ ரிக்ஷாவுக்கு மாற்றாக அதிக பாதுகாப்பு கொண்ட புதிய நான்கு சக்கர வாகனத்தை இந்திய அளவில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் வடிவமைத்து இந்தியாவில் 2012 ஆம் ஆண்டு இந்தக் கார்கள் அறிமுகப்படுத்தியது.   பஜாஜ் நிறுவனம் வடிவமைத்த முதல் நான்கு சக்கர வாகனம் இதுதான். இ‌தில் 200சிசி பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

தற்போது இலங்கையில் விற்பனைக்கு வரவுள்ள மேற்படி நான்கு சக்கரக் காரானது, கொட்ரிசைக்கிள் (Quadricycle) என்றே அழைக்கப்படுகிறது. இந்த கொட்ரிசைக்கிளின் வரலாறு, 1896ஆம் ஆண்டுக் காலத்துக்குரியதாகும். உலகப் பிரசித்திபெற்ற போர்ட் நிறுவனமானது, 1896ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4ஆம் திகதியன்றே, தனது முதலாவது கொட்ரிசைக்கிளைத் தயாரித்தது. தற்போது, இந்தியாவின் பஜாஜ் நிறுவனமானது, தனது கொட்ரிசைக்கிள் உற்பத்தியை Qute என்ற பெயரில் சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை, 2 ஆயிரம் அமெரிக்க டொலர்களாகும். இலங்கை ரூபாய்ப்படி, 3 இலட்சம் மாத்திரமேயாகும். பஜாஜ் நிறுவனத்தின் கொட்ரிசைக்கிள் ஆனது, தற்போது இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. தற்போது, அவ்வாகனம் தொடர்பான தரப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வெகு விரைவில், இலங்கை வாழ் பொதுமக்கள், இந்த கொட்ரிசைக்கிளைக் கொள்வனவு செய்யக்கூடியதாக இருக்கும் என்று அரசாங்கத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இவ்வாகனத்துக்கான வரியுடன் கூடிய விலை, இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என்றே தெரிவிக்கப்படுகின்றது. மணித்தியாலத்துக்கு 70 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கக்கூடிய இந்த வாகனமானது, நகரப் பாவனைக்காக மாத்திரமே தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், நான்கு பேர் மாத்திரமே பயணிக்க முடியும் என்பதுடன், ஒரு லீற்றர் பெற்றோலில் 36 கிலோமீற்றர் தூரம் செல்ல முடியும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.16

Bajaj-Qute-Front-Side Bajaj-Qute-L
IMG_20150817_112410269

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com