காபூலில் குண்டுத்தாக்குதல் 80 பேர் பலி 200-க்கும் அதிகமானோர் படுகாயதட

160723160619_kabul_attack_640x360_ap
ஆப்கன் தலைநகர் காபூலில் நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதலில் குறைந்தது 80 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 200-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
போராட்டம் நடத்திய ஹஸாரா சிறுபான்மை இனத்தவரை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த வெடிகுண்டுகள் தங்களுடைய இரண்டு தற்கொலை தாக்குதல்தாரிகளால் வெடிக்கச் செய்யப்பட்டதாக இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் ஐஸ்ஐ.எஸ் அமைப்பு கூறியிருக்கிறது.
ஹஸாரா இனத்தவர் ஷியா முஸ்லிம்கள் என்ற உண்மையை அழுத்தமாக தெரிவித்திருக்கும் அந்தக் குழு, பிரிவினைவாத மோதலை அதிகரிப்பதற்கான நோக்கத்தையும் குறிப்பிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ பிரிவு இந்தத் தாக்குதலை கண்டித்துள்ளது.
கொல்லப்பட்டோரின் இந்த இரத்தத்திற்கு பழிவாங்கப்படும் என்று தெரிவித்திருக்கும் அதிபர் அஷரப் கனி, ஞாயிற்றுக்கிழமை தேசிய துக்க நாளாக அனுசரிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.160723132304_kabul_attack_624x351_gettyimages_nocredit160723165819_kabul_attack_624x351_bbc_nocredit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com