காணிப் பிணக்குகள் தீர்க்க யாழில் மத்தியஸ்தர் சபை உருவாக்கம்

48c8af6a783fd24f062c3cf877f39c1b_Lவடக்கு மாகாணத்தில் காணப்படும் காணி தொடர்பான பிரச்சனைகளை இலகுவாக தீர்த்து வைக்கும் பொருட்டு நீதி அமைச்சின் கிழ் தாபிக்கப்பட்டுள்ள காணி விடயத்திற்கான விசேட மத்தியஸ்த சபை இன்று(27) யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று(27) இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ள மத்தியஸ்த சபையில் கடமையாற்றவுள்ள மத்தியஸ்தர்களிற்கான நியமனம் வழங்கி வைக்கப்பட்டது. குறித்த மத்தியஸ்த சபையானது வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சியிலும் கிழக்கு மகாணத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டத்திலும், மத்திய மாகாணத்தில் அனுராதபுரத்திலும் நீதி அமைச்சின் கீழ் தாபிக்கபட்டுள்ளது.

இந்த நிகழ்வில் நீதி அமைச்சின் பிரதி அமைச்ர் சுமந்த மித்ரபால, மத்தியஸ்த சபைகள் ஆணைக்கழுவின் தவிசாளர் ஹெக்டர் எஸ். யாபா, சிறுவர் மற்றும் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் அரச அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds