காணிஅபகரிப்புக்கு எதிரான போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆதரவு

TNPF-LOGOகாணிஅபகரிப்புக்கு எதிரான போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கட்சியின் பொதுச்செயலாளரினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கை வருமாறு,

காணிஅபகரிப்புக்கு எதிரான போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆதரவு

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் கிழக்கில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான 617 ஏக்கர் காணிணை அளவீடு செய்து நிரந்தரமாக கடற்படைக்கு வழங்குவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சியை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது.

மேற்படி காணி அபகரிப்பு நடவடிக்கையை எதிர்த்து காணி உரிமையாளர்களால் புதன்கிழமை (03-08-2016) காலை 9.00 மணியளவில்  மேற்கொள்ளப்படும் போராட்டத்திற்கு எமது கட்சி முழுமையான ஆதரவை வழங்குவதுடன், இவ்விடயத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து பொது அமைப்புக்கள் மட்டுமன்றி தமிழ்த் தேசத்திலுள்ள அனைத்து பொது அமைப்புக்களும் முள்ளிவாய்க்கால் கிழக்கு மக்களுடன் கரம்கோர்த்து நில ஆக்கிரமிப்புக்கு எதிரான குரலை வலுப்படுத்த முன்வர வேண்டும் எனவும் கோருகின்றோம்.

இந்த நில ஆக்கிரமிப்பு பிரச்சினையானது வெறுமனே அந்த காணி உரிமையாளர்களுக்கான பிரச்சினை மட்டுமல்ல  மாறாக ஒட்டுமொத்த தமிழ்த் தேசத்தினதும் இருப்பை கேள்விக்குறியாக்கும் விடயம் என்பனை புரிந்து கொண்டு அனைவரும் ஒன்று திரளவேண்டும்.

நன்றி
செ.கஜேந்திரன்
பொதுச் செயலாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com