காணாமல் போன மகளை வெலிக்கடை சிறையில் கண்டேன். – தாய் சாட்சியம்.

காணாமல் போன தனது மகளை வெலிக்கடை சிறைச்சாலையில் கண்டதாக தாய் ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார்.

மேலும் தமது சாட்சியத்தில் குறிப்பிடுகையில், 
கிளிநொச்சியில் வேலை செய்து கொண்டிருந்த எனது மகளான சிவலிங்கம் அனுசியா 2007ம் ஆண்டு 12ம் மாதம் 23ம் திகதி புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பின் போது பிடித்து செல்லப்பட்டார்.
அதன் பின்னர் 2008ம் ஆண்டு கால பகுதியில் புலிகளின் சீருடையுடன் ஸ்கந்தபுரத்தில் கண்டேன். அதன் பின்னர் மகளை பற்றிய எந்த தகவலும் இல்லை.
அந்நிலையில் கடந்த 2014ம் ஆண்டு ஆவணி மாதம் மகளை தேடி வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்ற போது நான் நின்ற இடத்தில் இருந்து சில மீற்றர் தூரம் தள்ளி ஒரே மாதிரியான தைத்த உடைகள் அணிந்த வாறு சில பெண் பிள்ளைகள் நின்றனர். அவர்களுடன் எனது மகளும் நின்றார்.
சில நிமிடத்தில் வெள்ளை உடுப்பு அணிந்தவாறு 7 பெண்களை சிறைச்சாலை உத்தியோகஸ்தர்கள் அழைத்து வந்து சிறைச்சாலை வாகனத்தில் ஏற்றினார்கள் அவர்களை தொடர்ந்து அங்கு நின்ற எனது மகள் உட்பட அதில் நின்ற பெண்களையும் வாகனத்தில் ஏற்றி சென்றனர்.
உடனே அங்கே நின்ற சிறைச்சாலை உத்தியோகஸ்தரை கேட்டேன் எங்கே கூட்டிட்டு செல்கின்றார்கள் என அதற்கு அவர் நீதிமன்றம் அழைத்து செல்ல படுகின்றார்கள் என தெரிவித்தார்.
அதன் பின்னர் நாம் எனது பிள்ளையின் பெயரை சொல்லி எப்ப  விடுவீர்கள் , என கேட்ட போது அவ்வாறு யாரும் இல்லை என கூறி எம்மை அங்கு இருந்து செல்லுமாறு கூறினார்கள்.
அதன் பிறகு கடந்த டிசம்பர் மாதம் ஒருவர்,  முகநூளில் இறுதி யுத்தத்தில் கைது செய்யபப்ட்டவர்கள் என சில பெண் பிள்ளைகளின் புகைப்படங்களை போட்டு இருந்தார் அதில் எனது மகளின் படமும் உள்ளது. என சாட்சியத்தில் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com